»   »  கவர்ச்சி சந்தியா!

கவர்ச்சி சந்தியா!

Subscribe to Oneindia Tamil

காதல் சந்தியாவை கவர்ச்சி சந்தியாவாக பார்க்க தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள் ஆசைப்படுகிறார்கள்.இதற்காக தனி டப்பும் கொடுக்க தயாராக இருக்கிறார்களாம்.

காதல் மூலம் தமிழ் ரசிகர்களை வசீகரித்த சந்தியா, தெலுங்கிலும் தனி ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியுள்ளார்.காதல் படம் தெலுங்கில் டப் ஆனபோது தமிழைப் போலவே தெலுங்கிலும் செமையாக வசூலை அள்ளிக்குவித்தது.

இதனால் சந்தியாவைத் தேடி நிறைய தெலுங்குப் படவாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் அந்த நேரத்தில்மலையாளத்தில் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இதனால் தெலுங்குப் பட வாய்ப்புகளை ஏற்கமுடியாத நிலை.

இப்போது மலையாளத்தில் அதிக படங்கள் இல்லாமல் இருக்கிறார் சந்தியா. தமிழிலும் அவர் நடித்து வரும்வல்லவன் ரொம்ப காலமாக தயாரிப்பில் உள்ளது. கூடல் நகர் படப்பிடிப்பும் தாமதமாகி வருகிறது.

இதனால் தெலுங்கில் நடிக்கலாம் என முடிவு செய்த சந்தியா முதல் கட்டமாக தெலுங்கு பேசக் கற்றுக் கொண்டார்.முன்பை விட இப்போது நன்றாகவே தெலுங்கு பேசுகிறாராம் சந்தியா.

சந்தியா தெலுங்கில் நடிக்க ஆயத்தமாகி விட்டார் என்ற தகவல் கிடைத்ததுமே தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள்சந்தியாவுக்கு போன் போட ஆரம்பித்து விட்டனர். நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளதாம். ஆச்சரியம்என்னவென்றால் அதில் முக்கால்வாசிப் படங்களில் கிளாமர் காட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள்கூறுவதுதான்.

இதைக் கேட்டதும் குழம்பிப் போயுள்ளாராம் சந்தியா. யோசிக்க வேண்டாம், கிளாமர் காட்டினால் அதற்குதனியாக டப்பு கொடுத்து விடுகிறோம் என தெலுங்குத் தயாரிப்பாளர்கள் ஆசை காட்டி வருகிறார்களாம்.

இதனால் என்ன செய்வது என்று சந்தியா குழம்பியுள்ளாராம். குடும்பக் குத்து விளக்காக இருப்போமா அல்லதுபெட்ரோமாக்ஸ் ஆகி விடலாமா என்பதுதான் சந்தியாவின் குழப்பத்திற்குக் காரணம்.

அடக்க ஒடுக்கமான கேரக்டரில் வந்து போய்க் கொண்டிருக்கும் சந்தியாவை கிளாமர் லேடியாக திரையில் பார்க்கரசிகர்களும் ரெடியாகத்தான் இருக்கிறார்கள்.

சந்தியா என்ன முடிவு எடுக்கப் போகிறாரோ!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil