சந்தியாவும் லிப்ஸும் காதல் சந்தியாவின் உதடுகள் பெரியதாக இருப்பதால் அதை ஆபரேஷன் செய்து சின்னதாக்க போவதாக வெளியான தகவலில்எந்த உண்மையும் இல்லையாம்.காதலுக்குப் பிறகு தனது தாய்மொழியான மலையாளத்திலும் கால் பதிக்கலாம் என்ற கனவோடு போன சந்தியாவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட் என்ற முதல் படத்திலேயே அங்கு முன்னணி நாயகனான ஜெயராமுடன் நடிக்கவாய்ப்பு கிடைத்து.ஆனால் நாயகியாக அல்ல. ஜெயராமின் தங்கையாக நடிக்கத் தான் சந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அந்தப்படத்தில் நிறைய நடிக்க ஹோப் உள்ள கேரக்டர் என்பதால் தனது கேரக்டர் பேசப்படும் என்று நம்பி தங்கை கேரக்டரில்நடித்தார்.ஆனால் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய மாதிரி படமும் ஓடவில்லை. சந்தியாவின் எதிர்பார்ப்பும் வீணானது. இதனால்தாய்மொழி கைவிட்ட சோகத்தில் மீண்டும் கோலிவுட்டுக்கே திரும்பி வந்த சந்தியா இப்போது நடித்து வருவது 2 படங்களில்.ஒன்று "மன்மதன் சிம்புவுடன் வல்லவனில் 3 நாயகிகளில் ஒருவராக. அடுத்த படம் டிஷ்யூம். சுசி இயக்கும் இந்தப் படத்தின்நாயகன் ஜீவா.காதல் படத்தில் நடிக்க வரும்போது அம்மா, அப்பா என குடும்ப சகிதம் படப்பிடிப்பு வந்து கொண்டிருந்த சந்தியா இப்போதுதனியாகத் தான் வருகிறாராம். தயாரிப்பாளர்களுக்கோ, டைரக்டர்களுக்கோ தன்னுடைய பெற்றோர்களால் எந்த தொந்தரவும்இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணம் தான் இதற்கு காரணமாம்.காதல் படத்தில் நடிக்கும் போது சந்தியாவுக்கு ஒரு சோகம் இருந்தது. அது வேறொன்றுமில்லை. தன்னால் பத்தாம் வகுப்புதேர்வு எழுத முடியவில்லையே என்ற வருத்தம் தான்.இப்போது வீட்டில் வைத்தே படித்து தனியாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதப் போகிறாராம். இதற்காக படப்பிடிப்பு இல்லாதநேரங்களில் புத்தகமும் கையுமாகத் தான் இருக்கிறார். தொடர்ந்து படித்து பிளஸ் டூவை கடந்து விட வேண்டும் என்பது தான்சந்தியாவின் இப்போதைய திட்டம்.இதனால் பத்தாம் வகுப்பு சோகம் மறைந்து விட்டாலும் இப்போது வேறொரு சோகத்தில் இருக்கிறார் சந்தியா. ஆசை ஆசையாய்வளர்த்து சந்தியாவின் செல்ல நாய்க்குட்டியை அவரது அப்பா வீட்டை விட்டே துரத்தி விட்டாராம்.நாய் போன சோகத்தில் தூக்கத்தில் கூட தேம்பித் தேம்பி அழுதாராம் சந்தியா. பல நாட்கள் வீட்டில் உண்ணாவிரதப்போராட்டமும் நடத்தியிருக்கிறார் சந்தியா.அப்படி என்ன அந்த நாய் மேல் உங்களுக்கு என்ன பாசம் என்று தெரியாமல் கேட்டு விட்டோம். உடனே நாய் மாதிரி நம் மீதுபாயாத குறையாக, எனக்கு நாய்ன்னா எவ்வளவு உசிரு தெரியுமா? ஒரு நாயை வளர்த்துப் பாருங்க, உங்களுக்கு தெரியும்.மனுஷங்களை விட அது ரொம்பப் பாசமாக இருக்கும். ஆயுசு முழுக்க அந்த நாயை மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட நாயைவீட்டை விட்டு துரத்திய என்னுடைய அப்பாவை நினைத்தால் எனக்கு கோபம் கோபமாக வருகிறது என்று நம் மீது விழுந்துகடிக்காத குறையாக குரைத்தார்...சாரி கூறினார்.சரி, அந்த நாய் மேல் சந்தியாவின் அப்பாவுக்கு அப்படி என்ன தான் கோபம் என்று தான் தெரியவில்லை.சமீபத்தில் சந்தியா குறித்து கோலிவுட்டில் சந்தியாவின் லிப்ஸைப் பற்றி ஒரு "பரபரப்பான கிசுகிசு உலா வந்தது. அதுவேறொன்றுமில்லை. சந்தியாவின் அழகைக் கெடுப்பதே அவரது பெரிதான உதடுகள் தான். இதனால் அவர் தன்னுடையஉதடுகளை ஆபரேஷன் செய்து சின்னதாக்கப் போகிறார் என்பது தான் அந்த லிப்ஸ் கிசுகிசு.ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லையாம். என்னுடைய உதடுகளைப் பற்றி நான் கவலைப்படவே இல்லை.கவலைப்பட்டால் தானே ஆபரேஷன் எல்லாம் செய்ய வேண்டும். இது யாரோ கிளப்பி விட்ட வதந்தி என்கிறார் சந்தியா.சரி, எதற்கும் சிம்புவிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்..

By Staff

காதல் சந்தியாவின் உதடுகள் பெரியதாக இருப்பதால் அதை ஆபரேஷன் செய்து சின்னதாக்க போவதாக வெளியான தகவலில்எந்த உண்மையும் இல்லையாம்.

காதலுக்குப் பிறகு தனது தாய்மொழியான மலையாளத்திலும் கால் பதிக்கலாம் என்ற கனவோடு போன சந்தியாவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட் என்ற முதல் படத்திலேயே அங்கு முன்னணி நாயகனான ஜெயராமுடன் நடிக்கவாய்ப்பு கிடைத்து.

ஆனால் நாயகியாக அல்ல. ஜெயராமின் தங்கையாக நடிக்கத் தான் சந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அந்தப்படத்தில் நிறைய நடிக்க ஹோப் உள்ள கேரக்டர் என்பதால் தனது கேரக்டர் பேசப்படும் என்று நம்பி தங்கை கேரக்டரில்நடித்தார்.

ஆனால் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய மாதிரி படமும் ஓடவில்லை. சந்தியாவின் எதிர்பார்ப்பும் வீணானது. இதனால்தாய்மொழி கைவிட்ட சோகத்தில் மீண்டும் கோலிவுட்டுக்கே திரும்பி வந்த சந்தியா இப்போது நடித்து வருவது 2 படங்களில்.

ஒன்று "மன்மதன் சிம்புவுடன் வல்லவனில் 3 நாயகிகளில் ஒருவராக. அடுத்த படம் டிஷ்யூம். சுசி இயக்கும் இந்தப் படத்தின்நாயகன் ஜீவா.


காதல் படத்தில் நடிக்க வரும்போது அம்மா, அப்பா என குடும்ப சகிதம் படப்பிடிப்பு வந்து கொண்டிருந்த சந்தியா இப்போதுதனியாகத் தான் வருகிறாராம். தயாரிப்பாளர்களுக்கோ, டைரக்டர்களுக்கோ தன்னுடைய பெற்றோர்களால் எந்த தொந்தரவும்இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணம் தான் இதற்கு காரணமாம்.

காதல் படத்தில் நடிக்கும் போது சந்தியாவுக்கு ஒரு சோகம் இருந்தது. அது வேறொன்றுமில்லை. தன்னால் பத்தாம் வகுப்புதேர்வு எழுத முடியவில்லையே என்ற வருத்தம் தான்.

இப்போது வீட்டில் வைத்தே படித்து தனியாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதப் போகிறாராம். இதற்காக படப்பிடிப்பு இல்லாதநேரங்களில் புத்தகமும் கையுமாகத் தான் இருக்கிறார். தொடர்ந்து படித்து பிளஸ் டூவை கடந்து விட வேண்டும் என்பது தான்சந்தியாவின் இப்போதைய திட்டம்.

இதனால் பத்தாம் வகுப்பு சோகம் மறைந்து விட்டாலும் இப்போது வேறொரு சோகத்தில் இருக்கிறார் சந்தியா. ஆசை ஆசையாய்வளர்த்து சந்தியாவின் செல்ல நாய்க்குட்டியை அவரது அப்பா வீட்டை விட்டே துரத்தி விட்டாராம்.

நாய் போன சோகத்தில் தூக்கத்தில் கூட தேம்பித் தேம்பி அழுதாராம் சந்தியா. பல நாட்கள் வீட்டில் உண்ணாவிரதப்போராட்டமும் நடத்தியிருக்கிறார் சந்தியா.


அப்படி என்ன அந்த நாய் மேல் உங்களுக்கு என்ன பாசம் என்று தெரியாமல் கேட்டு விட்டோம். உடனே நாய் மாதிரி நம் மீதுபாயாத குறையாக, எனக்கு நாய்ன்னா எவ்வளவு உசிரு தெரியுமா? ஒரு நாயை வளர்த்துப் பாருங்க, உங்களுக்கு தெரியும்.

மனுஷங்களை விட அது ரொம்பப் பாசமாக இருக்கும். ஆயுசு முழுக்க அந்த நாயை மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட நாயைவீட்டை விட்டு துரத்திய என்னுடைய அப்பாவை நினைத்தால் எனக்கு கோபம் கோபமாக வருகிறது என்று நம் மீது விழுந்துகடிக்காத குறையாக குரைத்தார்...சாரி கூறினார்.

சரி, அந்த நாய் மேல் சந்தியாவின் அப்பாவுக்கு அப்படி என்ன தான் கோபம் என்று தான் தெரியவில்லை.

சமீபத்தில் சந்தியா குறித்து கோலிவுட்டில் சந்தியாவின் லிப்ஸைப் பற்றி ஒரு "பரபரப்பான கிசுகிசு உலா வந்தது. அதுவேறொன்றுமில்லை. சந்தியாவின் அழகைக் கெடுப்பதே அவரது பெரிதான உதடுகள் தான். இதனால் அவர் தன்னுடையஉதடுகளை ஆபரேஷன் செய்து சின்னதாக்கப் போகிறார் என்பது தான் அந்த லிப்ஸ் கிசுகிசு.

ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லையாம். என்னுடைய உதடுகளைப் பற்றி நான் கவலைப்படவே இல்லை.கவலைப்பட்டால் தானே ஆபரேஷன் எல்லாம் செய்ய வேண்டும். இது யாரோ கிளப்பி விட்ட வதந்தி என்கிறார் சந்தியா.

சரி, எதற்கும் சிம்புவிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்..

Read more about: sandhya is sad
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X