»   »  நானும் என் சந்தியாவும் ...

நானும் என் சந்தியாவும் ...

Subscribe to Oneindia Tamil

காதல் சந்தியாவின் அடுத்த தமிழ் படம் "நானும் என் சந்தியாவும்.

காதல் மூலம் அறிமுகமாகி, தாய் மொழியான மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்து முடித்து விட்ட சந்தியா இப்போதுதமிழிலும் சில படங்களில் நடித்து வருகிறார். சிம்புவுடன் வல்லவனில் வில்லத்தனம் நிறைந்த கேரக்டரில் நடிக்கப் போகிறார்.

அறிமுகமானது தமிழால் தான் என்றாலும் விழாக்களுக்குப் போனாலும், வெளியில் எங்கு போனாலும் மலையாள கலாச்சாரஉடையில் தான் வருகிறார், போகிறார் சந்தியா.

அத்தோடு, மலையாள பத்திரிக்கைகளில் தன்னைப் பற்றிய செய்திகள் நிறைய வருவதற்கும் ஆசைப்படுகிறார். இதற்காகதன்னுடைய லேட்டஸ்ட் புகைப்பட ஆல்பம் ஒன்றையும் ஒரு ரவுண்டு விட்டுள்ளாராம்.

காதல் படத்தில் சம்பளத்தை வெறும் ஆயிரங்களில் மட்டும் வாங்கிய சந்தியா வல்லவன் படத்தில் எவ்வளவு வாங்கியிகருக்கிறார்தெரியுமா? கேட்டால் தனது இரண்டு கைகளையும் விரித்துக் காட்டுகிறார். என்ன புரியவில்லையா? 10 லட்சம் தான்.

ஒரு படம் ஓடுவதற்குள் இவ்வளவா என்று மூக்கின் மேல் விரலை வைக்கிறார்களாம் கோடம்பாக்கவாசிகள். மலையாளத்தில்இவர் சமீபத்தில் நடித்த ஆலீஸ் இன் ஒண்டர்லேன்ட் படத்தில் இவர் வெறும் 2 லட்சம் தான் வாங்கியிருந்தார்.

தமிழில் டப்பிங்குரலில் பேசி வரும் இவர் தனது தாய் மொழியான மலையாளத்தில் சொந்தக் குரலில் பேசி கலக்கியுள்ளாராம்.தமிழில் எப்போது சொந்தக் குரலில் பேசப் போகிறீர்கள் என்று கேட்டால், தெளிவாக தமிழ் படித்த பிறகு பாருங்கள் நான் சொந்தக்குரலில் பேசுவதை என்கிறார்.

சந்தியாவின் அடுத்த படத்திற்கு "நானும் என் சந்தியாவும் என பெயர் சூட்டப்பட்டுள்து. ஒயிட் ஸ்க்ரீன் புரொடக்ஷன் நிறுவனம்தயாரிக்கும் இந்தப் படத்தில் சந்தியாவுக்கு ஜோடியாக புதுமுக நடிகரான மகேஷ் என்பவர் நடிக்கவுள்ளார்.

தேவதையைக் கண்டேன் படத்தை இயக்கி வெற்றி பெற்ற பூபதி பாண்டியன் தான் இப்படத்தை இயக்கப் போகிறார். தெலுங்குகாமெடியனான குண்டு சுமன் ஷெட்டி, சந்திர மோகன், கொச்சின் ஹனீபா ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.

கருணாஸின் மனைவி கிரேஸ் கருணாஸ் வித்தியாசமான ஒரு காமெடி வேடத்தில் இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து தீட்டப் போகிறார்.

சந்தியாவை முன்வைத்து கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளதாம். சந்தியாவிடம் உள்ள அத்தனை திறமைகளையும் இந்த ஒரேபடத்தில் கொண்டு வரப் போகிறாராம் பூபதி பாண்டியன்.

இது ஒரு புறமிருக்க, சந்தியாவின் அம்மா சென்னை வடபழனியில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். மகள் சினிமாவில்பெயர் வாங்கி பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த போதிலும் தாய்க்குலம் தனது அழகு நிலைய தொழிலை நடத்தி வந்தார்.

இப்போது இந்த அழகு நிலையத்தை மூடிவிட்டாராம். சமீப காலமாக அழகு நிலையங்கள் மீது போலீஸார் ஒரு கண்வைத்துள்ளார்கள். எக்குத் தப்பாக போலீஸ் வந்து ஏடாகூடமாக எதுவும் ஆகி தனது மகளின் சினிமா வாழ்க்கைகேள்விக்குறியாகி விடக்கூடாது என்பதற்காக தான் இந்த அதிரடி நடவடிக்கையாம்.

அம்மான்னா அம்மா தான்!

Read more about: sandhyas new film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil