சந்தியாவுக்கு பிடித்த ஜோதிகா கவர்ச்சியாக நடிப்பதை விட வித விதமான கேரக்டர்களில் நடிப்பதையே விரும்புகிறேன் என்கிறார் காதல் நாயகி சந்தியா.காதல் மூலம் அறிமுகமாகி கை நிறையப் படங்களுடன் படு பிசியாக வலம் வரும் சந்தியா, இப்போது சிம்புவுடன் வல்லவன்படத்தில் அவரது தோழியாக நடித்து வருகிறார்.பிசியாக நடித்து வரும் நிலையில் சடாரென செய்தியாளர்களை சந்தித்தார் சந்தியா.வசீகரிக்கும் கோணல் சிரிப்புடன் சந்தியா சிந்திய வார்த்தைகள்:காதல் படத்தில் எனக்கு இவ்வளவு பெயர் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.நிறைய பட வாய்ப்புகள் என்னைத் தேடி வருகின்றன. இருப்பினும் இப்போது 3 படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன்.கேரக்டர் எனக்குப் பிடிக்க வேண்டும். அந்த கேரக்டரை நான் செய்வதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும்.எனக்கு கவர்ச்சி பிடிக்காது என்று கூற மாட்டேன். கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. கிளாமர்தேவையென்றால் அப்படி நடிக்கலாம். ஆனால், பொதுவாக, வித விதமான கேரக்டரில் நடித்து நல்ல பெயர் வாங்க வேண்டும்என்பதுதான் எனது ஆசை.பரத்துடன மீண்டும் ஜோடி சேர்ந்து கூடல்நகர் படத்தில் நடிக்கிறேன். இதுவும் மதுரையை மையமாகக் கொண்ட கதைதான்.கலக்கலாக வரப் போகிறது. அப்புறம் சிம்புவுடன் வல்லவன், ஜீவாவுடன் டிஷ்யூம் என மேலும் இரண்டு படங்களில் நடித்துவருகிறேன். இந்தப் படங்களை முடித்து விட்டுத்தான் அடுத்த படம் குறித்து சிந்திப்பேன்.எனக்கு நடிப்பது பற்றி கனவே இருந்ததில்லை. நல்ல மாடலாக வர வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். அதற்கானமுயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தேன். ஆனால் திடீரென நடிக்க வாய்ப்பு வந்து இப்போது நடிகையாகி விட்டேன்.நடிகைகளில் எனக்குப் பிடித்தவர்கள் என்று நறையப் பேர் இருக்கிறார்கள். அந்தக் கால நடிகைகளில் ஷோபாவும், இப்போதுஜோதிகாவும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.ஒத்தப் பாட்டுக்கு ஆடுவீகளா? என்று கேட்கிறார்கள். அய்யோ, அதெல்லாம் வேண்டாம். நல்ல கேரக்டர்களில் நடித்து நல்லபெயர் வாங்க வேண்டும். ஒற்றைப் பாட்டுக்கெல்லாம் ஆடவே மாட்டேன் என்றார் சந்தியா.எல்லா நடிகைகளும் ஆரம்பத்தில் இப்படி சொன்னவர்கள் தானே!. சந்தியா எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்.

By Staff

கவர்ச்சியாக நடிப்பதை விட வித விதமான கேரக்டர்களில் நடிப்பதையே விரும்புகிறேன் என்கிறார் காதல் நாயகி சந்தியா.

காதல் மூலம் அறிமுகமாகி கை நிறையப் படங்களுடன் படு பிசியாக வலம் வரும் சந்தியா, இப்போது சிம்புவுடன் வல்லவன்படத்தில் அவரது தோழியாக நடித்து வருகிறார்.

பிசியாக நடித்து வரும் நிலையில் சடாரென செய்தியாளர்களை சந்தித்தார் சந்தியா.

வசீகரிக்கும் கோணல் சிரிப்புடன் சந்தியா சிந்திய வார்த்தைகள்:

காதல் படத்தில் எனக்கு இவ்வளவு பெயர் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நிறைய பட வாய்ப்புகள் என்னைத் தேடி வருகின்றன. இருப்பினும் இப்போது 3 படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன்.கேரக்டர் எனக்குப் பிடிக்க வேண்டும். அந்த கேரக்டரை நான் செய்வதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும்.

எனக்கு கவர்ச்சி பிடிக்காது என்று கூற மாட்டேன். கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. கிளாமர்தேவையென்றால் அப்படி நடிக்கலாம். ஆனால், பொதுவாக, வித விதமான கேரக்டரில் நடித்து நல்ல பெயர் வாங்க வேண்டும்என்பதுதான் எனது ஆசை.

பரத்துடன மீண்டும் ஜோடி சேர்ந்து கூடல்நகர் படத்தில் நடிக்கிறேன். இதுவும் மதுரையை மையமாகக் கொண்ட கதைதான்.கலக்கலாக வரப் போகிறது. அப்புறம் சிம்புவுடன் வல்லவன், ஜீவாவுடன் டிஷ்யூம் என மேலும் இரண்டு படங்களில் நடித்துவருகிறேன். இந்தப் படங்களை முடித்து விட்டுத்தான் அடுத்த படம் குறித்து சிந்திப்பேன்.

எனக்கு நடிப்பது பற்றி கனவே இருந்ததில்லை. நல்ல மாடலாக வர வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். அதற்கானமுயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தேன். ஆனால் திடீரென நடிக்க வாய்ப்பு வந்து இப்போது நடிகையாகி விட்டேன்.

நடிகைகளில் எனக்குப் பிடித்தவர்கள் என்று நறையப் பேர் இருக்கிறார்கள். அந்தக் கால நடிகைகளில் ஷோபாவும், இப்போதுஜோதிகாவும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

ஒத்தப் பாட்டுக்கு ஆடுவீகளா? என்று கேட்கிறார்கள். அய்யோ, அதெல்லாம் வேண்டாம். நல்ல கேரக்டர்களில் நடித்து நல்லபெயர் வாங்க வேண்டும். ஒற்றைப் பாட்டுக்கெல்லாம் ஆடவே மாட்டேன் என்றார் சந்தியா.

எல்லா நடிகைகளும் ஆரம்பத்தில் இப்படி சொன்னவர்கள் தானே!. சந்தியா எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்.

Read more about: sandhya is jyothikas fan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X