தங்கச்சி ஆனார் சந்தியா காதல் நாயகி சந்தியா, தங்கச்சி நடிகையாகியுள்ளார் - தமிழில் அல்ல, தெலுங்கில்.காதல் மூலம் ஓவர்நைட்டில் மேலே வந்தவர் சந்தியா. அதற்குப் பிறகு அவரது கை நிறைய படங்கள். இருப்பினும்செலக்ட்டிவ்வாக இருப்பதால் வல்லவனில் மட்டும் இப்போது நடித்து வருகிறார்.காதல் சமீபத்தில் தெலுங்கில் டப் செய்து வெளியானது. தமிழைப் போல இல்லாவிட்டாலும், கூட தெலுங்கிலும்நன்றாக ஓடுகிறது காதல். இதனால் சந்தியாவும் அங்கு பாப்புலராகி விட்டார்.விடுவார்களா மணவாடுகள்! உடனே சந்தியாவைத் தேடி ஓடி விட்டனர். தமிழில் சூப்பர் ஹிட் ஆன திருப்பாச்சிபடத்தை சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணை வைத்து ரீமேக் செய்யவுள்ளனர். விஜய் வேடத்தை பவன்கல்யாண் செய்கிறார். அவருக்கு தங்கச்சியாக நடிக்கப் போகிறவர் நம்ம சந்தியா. சந்தியாவின் குழந்தைத்தனமான முகம் இந்தக் கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதோடு, காதல்தெலுங்குக்குக் கிடைத்த வெற்றியினால் ரசிகர்கள் மத்தியில் சந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் கிரேஸையும் சரியாகப்பயன்படுத்திக் கொள்ளும் விதமாக சந்தியாவை புக் செய்துள்ளார்களாம்.தங்கச்சி வேடம் என்றாலும் கூட கேரக்டர் வலுவாக இருப்பதால் உடனே ஒத்துக் கொண்டாராம் சந்தியா. தமிழில்விஜய்யின் தங்கச்சியாக நடித்த மல்லிகா ரொம்பவே பேசப்பட்டார். இப்போது அவரது கை நிறைய படங்கள்.எல்லாம் குட்டி குட்டி ரோல்கள் தான் என்றாலும் பொழப்பு அது பாட்டுக்கு ஓடுகிறதல்லவா!

By Staff

காதல் நாயகி சந்தியா, தங்கச்சி நடிகையாகியுள்ளார் - தமிழில் அல்ல, தெலுங்கில்.

காதல் மூலம் ஓவர்நைட்டில் மேலே வந்தவர் சந்தியா. அதற்குப் பிறகு அவரது கை நிறைய படங்கள். இருப்பினும்செலக்ட்டிவ்வாக இருப்பதால் வல்லவனில் மட்டும் இப்போது நடித்து வருகிறார்.

காதல் சமீபத்தில் தெலுங்கில் டப் செய்து வெளியானது. தமிழைப் போல இல்லாவிட்டாலும், கூட தெலுங்கிலும்நன்றாக ஓடுகிறது காதல். இதனால் சந்தியாவும் அங்கு பாப்புலராகி விட்டார்.

விடுவார்களா மணவாடுகள்! உடனே சந்தியாவைத் தேடி ஓடி விட்டனர். தமிழில் சூப்பர் ஹிட் ஆன திருப்பாச்சிபடத்தை சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணை வைத்து ரீமேக் செய்யவுள்ளனர். விஜய் வேடத்தை பவன்கல்யாண் செய்கிறார். அவருக்கு தங்கச்சியாக நடிக்கப் போகிறவர் நம்ம சந்தியா.


சந்தியாவின் குழந்தைத்தனமான முகம் இந்தக் கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதோடு, காதல்தெலுங்குக்குக் கிடைத்த வெற்றியினால் ரசிகர்கள் மத்தியில் சந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் கிரேஸையும் சரியாகப்பயன்படுத்திக் கொள்ளும் விதமாக சந்தியாவை புக் செய்துள்ளார்களாம்.

தங்கச்சி வேடம் என்றாலும் கூட கேரக்டர் வலுவாக இருப்பதால் உடனே ஒத்துக் கொண்டாராம் சந்தியா. தமிழில்விஜய்யின் தங்கச்சியாக நடித்த மல்லிகா ரொம்பவே பேசப்பட்டார். இப்போது அவரது கை நிறைய படங்கள்.எல்லாம் குட்டி குட்டி ரோல்கள் தான் என்றாலும் பொழப்பு அது பாட்டுக்கு ஓடுகிறதல்லவா!

அந்தக் கணக்கில் தான் இப்போது சந்தியாவும் பவன் கல்யாணுக்கு தங்கச்சியாக நடிக்க ஒத்துக் கொண்டுள்ளார்போலும். இருப்பினும் தொடர்ந்து தங்கச்சி வேடங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் சந்தியா கூறியுள்ளார்.இந்தப் படத்திற்கு மட்டும் தான் தங்கச்சி. எனது இலக்கு ஹீரோயின் வேடங்கள்தான் என்று ஸ்டேட்மெண்ட்விடுகிறார் சந்தியா.

Read more about: sandhiya become sister
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X