»   »  சந்தியா Vs

சந்தியா Vs

Subscribe to Oneindia Tamil
வல்லவன் படம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. முதலில் சிம்புவால், பின்னர் ரீமா சென்னால் பிரச்சனைகள்.

இப்போது நயனதாரா, சந்தியா மற்றும் ரீமா சென் இடையே மோதல் மூளக் கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது.

தேனப்பன் தயாரிப்பில், சிம்புவின் கதை, வசனம், இயக்கத்தில் உருவாகும் படம் வல்லவன். நத்தை பெத்த தத்தை மாதிரிரொம்ப காலமாக முடியாமல் நத்தை வேகத்தில் வளர்ந்து கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒரு சீன் வீதம் படு வேகமாக படத்தைஇயக்கி வருகிறாராம் சிம்பு.

இதனால் செலவு ஒருபக்கம் எகிறிக் கொண்டிருக்க, சிம்பு எப்போ படத்தை முடிப்பார் என்ற எதிர்பார்ப்பு படம் சம்பந்தப்பட்டஅத்தனை பேர் மனதிலும் எழுந்துள்ளது. இந்த நிலையில் சிம்பு வைத்த செலவுகளால் தயாரிப்பாளர் அப்செட் ஆகிசிங்கப்பூருக்குப் போய்விட்டார் மண்டை சூட்டை தணிக்க.

ஒரு வழியாக அவரிடம் பேசி செட்டில் செய்தார் சிம்பு.

அதன்பிறகு, ரீமா சென் மூலம் இன்னொரு பிரச்சினை கிளம்பியதை சமீபத்தில் நாமே சொன்னோம். சிம்புவின் போக்கு பிடிக்காதரீமா, சிம்புவுக்கு டைரக்ஷனே தெரியலை என்று பேட்டி தர, பதிலுக்கு சிம்புவும், ரீமாவின் நடிப்பை விமர்சித்தார்.

இந்தப் பிரச்சினை அப்படியே இருந்து வரும் நிலையில், இப்போது புதுப் பிரச்சினை ஒன்று கிளம்பியுள்ளதாம். வல்லவனில்மொத்தம் 3 ஹீரோயின்கள். நயனதாரா, சந்தியா, ரீமா சென்.

இதில் ரீமா சென்னுக்கு சற்றே வில்லத்தனமான கதாபாத்திரம். 3 பேரையும் ஒப்பந்தம் செய்தபோது நீங்கள் படத்தோட தூண்,உங்களது கேரக்டர்தான் படத்தின் உயிர் நாடி என்றெல்லாம் தலையில் அடித்து சத்தியம் செய்து சிம்பு புக் செய்துள்ளார்.

ஆனால் படத்தில் நடிக்க நடிக்கத்தான் தங்களது கேரக்டர் குறித்து மூன்று பேருக்குமே தெரிய வந்ததாம். அதிலும் சமீபத்தில்சந்தியா அளித்த ஒரு பேட்டியில், படத்தில் எனது கேரக்டர்தான் முக்கியத்துவம் வாய்ந்தது. மற்ற ரெண்டு பேருடைய கேரக்டரும்கிளாமருக்காகவே வைக்கப்பட்டுள்ளது என்று குண்டைத் தூக்கிப் போட நயனதாராவும், ரீமா சென்னும் டென்ஷனாகிவிட்டார்களாம்.

சந்தியா சொல்வது சரிதான் என்பது போல நயனதாராவின் லிப்பை, தனது லிப்பால் கவ்விப் பிடித்த ஸ்டில்லை வெளியிட்டுபெரிய அளவில் பப்ளிசிட்டி தேடிக் கொண்டார் சிம்பு. படத்திலும் நயனதாராவுக்கு ஏக கிளாமர்.

சூட்டிங் ஸ்பாட்டுக்கு வெளியிலும் சிம்புவுக்கு மிக நெருக்கமாகிவிட்ட நயனதாரா நல்லாவே ஒத்துழைப்பு தருவதால்கவர்ச்சியை அள்ளி விடுகிறாராம்

அதேபோல ரீமா சென்னையும் முடிந்த வரை பிழிந்தெடுத்துள்ளாராம் சிம்பு. அவர் சம்பந்தப்பட்ட ஸ்டில்களை இன்னும்வெளியே விடாமல் வைத்துள்ளார். படம் சற்றே வளர்ந்தவுடன் ரீமா வெளியே வருவாராம்.

ஏற்கனவே சிம்பு மீது டென்சனில் இருக்கும் ரீமா தனது ரோலை வெறும் கிளாமர் டாலாக சிம்பு மாற்றி விட்டதால் மேலும்கடுப்பாகி இருக்கிறார். மேலும் சந்தியா தன்னை டம்மி என்று சொன்னதும் ரீமாவை உசுப்பேத்திவிட்டதாம். நயனுக்கும் சந்தியாமீது அதே கோபமாம்.

இதை அவ்வப்போது சூட்டிங் ஸ்பாட்டிலும் மூவரும் வெளிப்படுத்த அவவப்போது அக்னி நட்சத்திரம் பிரபு-கார்த்திக் எபெக்ட்உருவாவதாக சொல்கிறார்கள்.

படம் இழுபறியாகி வரும் நிலையில் ஹீரோயின்கள் இந்த அக்னி நடசத்திர மோதல் ஒரு நாள் பெரிய குண்டாக வெடிக்கப்போகிறது என்று காதைக் கடிக்கின்றனர் சூட்டிங் ஸ்பாட் பட்சிகள்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil