»   »  சங்கவி, விந்தியா சங்கமம்!

சங்கவி, விந்தியா சங்கமம்!

Subscribe to Oneindia Tamil

சங்கவியும், விந்தியாவும் நெருக்கமான தோழிகள் ஆகி விட்டனராம். எங்குபோனாலும் இருவரையும் சேர்ந்தே பார்க்க முடிகிறது.

சங்கம நாயகி விந்தியாவுக்கும் இப்போது வாய்ப்பில்லை. ஆரம்ப கால விஜய்ஜோடியான சங்கவியும் வாய்ப்பில்லால் மோட்டு வளையைப் பார்த்தபடி இருக்கிறார்.

முதலில் ஹீரோயினாகவும், பின்னர் செகண்ட் ஹீரோயினாகவும், அப்புறம் ஒத்தப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுபவராகவும் தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு வந்தவிந்தியா இப்போது அழகு நிலையம் என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே கையில்வைத்துள்ளார்.

இதற்கு மேலும் தன்னைத் தேடி ஹீரோயின் வாய்ப்பு தேடி வராது என்ற முடிவுக்குவந்து விட்ட அவர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசித்து வந்தார்.

அப்போதுதான் அவருக்கு சங்கவியின் நட்பு கிடைத்தது. சங்கவிக்கும் கிட்டத்தட்டவிந்தியாவின் நிலைதான். விஜய்யின் ஆரம்ப காலப் படங்களில் ஆஸ்தானஜோடியாக நடித்தவர் சங்கவி. பிறகு அஜீத், பிரஷாந்த் என நடிக்க ஆரம்பித்தார்.

இன்றைய முன்னணி இளம் நடிகர்களுடன் அந்தக் காலத்தில் ஜோடி போட்டவரானசங்கவிக்கு பிறகு வாய்ப்புகள் குறைந்து போயின. அதன் பிறகு அவரைக்காணவில்லை. திடீரென கமலுடன் பஞ்ச தந்திரம் படத்தில் தலை காட்டினார்.

சமீபத்தில் அவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், அவருக்குநடிகர் சங்க நிர்வாகிகள் மன நல ஆலோசனை வழங்கியதாகவும் கூட செய்திகள்வெளியாகின. இதைத் தொடர்ந்து சங்கவி புத்துணர்ச்சியுடன் புதுப் பாதையில்நடைபோட ரெடியாகி விட்டார்.

விந்தியாவுடன் கிடைத்த நட்பால் அவர் படு சந்தோஷமாக இருக்கிறாராம். குறுகியகாலத்திலேயே இருவரும் மிக நெருங்கிய தோழிகளாகி விட்டனராம். எங்குபோனாலும் சேர்ந்தே போகிறார்களாம். அவர் வீட்டுக்கு இவர் போவதும், இவர்வீட்டுக்கு அவர் போவதும் என ஒரே அமர்க்களம்தான் போங்கோ!

இந்த நெருங்கிய நட்புக்குப் பின்னணியாக ஒரு மேட்டரைக் கூறுகிறார்கள். அதாவதுஇரண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தை தயாரிக்கப் போகிறார்களாம். ரெண்டு பேரும்சேர்ந்து கொஞ்சம் துட்டு போட்டு, மிச்ச துட்டை மார்வாடிகளிடம் வாங்கி படம்தயாரிக்கத் திட்டமாம்.

அதிமுக தரப்பிலிருந்து சிலரும் உதவி செய்வதாக வாக்களித்துள்ளனராம். அதையும்ஏற்க விந்தியா முடிவு செய்துள்ளாராம். அதற்காகத்தான் இருவரும் நெருங்கிப் பழகிவருகிறார்களாம்.

ரம்பா இப்படித்தான் படம் எடுத்தார், வம்பாகிப் போச்சு, இப்போது விந்தியாவும்,சங்கவியும் சேர்ந்து சங்கமித்துள்ளனர்.

என்ன ஆகுமோ?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil