»   »  சங்கவியின் கலைச் சேவை!

சங்கவியின் கலைச் சேவை!

Subscribe to Oneindia Tamil

கையில் ஒரு படமும் இல்லாத சங்கவிக்கு இப்போது நிறைய வெளிநாட்டு கலைச் சேவைக்கான வாய்ப்புகள் கரைபுரண்டு ஓடி வருகிறதாம்.

மைசூர் தந்த இனிப்புப் பாப்பா சங்கவிக்கு இப்போது சுத்தமாக தமிழில் வாய்ப்பு இல்லை. தாய் மொழியான கன்னடத்திலும் அவரைக்காணவில்லை. தேடிப் போன தெலுங்கும் கை கொடுக்கவில்லை.

படங்கள்தான் இல்லையே, டிவி சீரியலில் நடிக்கலாமே என சிலர் பிட்டைப் போட்டுப் பார்த்தனர். ஆனால் சங்கவிக்கு அது உடன்பாடுஇல்லையாம். இதனால் டிவி பக்கமும் வராமல் வீட்டில் சும்மா டிவி பார்த்துக் கொண்டு பொழுதைப் போக்கி வருகிறார்.

நடிக்கும் வாய்ப்புதான் இல்லையே தவிர சங்கவியின் கலைத் தாகத்திற்கு இன்னும் ஓய்வில்லையாம். அம்மணியை வெளிநாடுகளில் அடிக்கடிப்பார்க்க முடிகிறதாம். கும்பல் கும்பலாக போய் கலைச் சேவை செய்யும் குழுவில் சங்கவி அடிக்கடி இடம் பெற்றுவிடுகிறார்.

வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளுக்குக் கூப்பிட்டால் உடனே ஓடி வந்து விடுகிறாராம் சங்கவி. சினிமாவை விட சிறப்பான ஆட்டத்தைவெளிநாடுகளில் வழங்கி அங்குள்ள இந்திய ரசிகர்களை சிலுசிலுக்க வைக்கிறார்.

குத்துப் பாட்டுக்குத்தான் பெரும்பாலும் சங்கவியை ஆட வைக்கிறார்களாம். அவரும் சங்கடப்படாமல், சங்கோஜப்படாமல் சத்தாய்க்கிறாராம்.சமீபத்தில்கூட பஹ்ரைனில் நடந்த தமிழ்ச் சங்க விழாவில் கலந்து கொண்டு ஆடினார்.

நடிப்பு கைவிட்டால் என்ன நாட்டு நடப்பு நமக்கு சாதகமாகத்தான் இருக்கிறது என்ற சந்தோஷத்தில் குத்தாட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்சங்கவி.

சங்கவிக்கு சென்னையில் நெருங்கிய தோழியாக இருப்பவர் விந்தியா. இப்போது இன்னொருவரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவர்வேறு யாருமல்ல, கஸ்தூரிதான்.

சென்னைக்கு வரும்போதெல்லாம் விந்தியாவையும், மறக்காமல் கஸ்தூரியையும் சந்தித்து கடலை உரிக்காமல் ஊருக்குத் திரும்புவில்லையாம்சங்கவி.

நல்லாருங்கம்மா, நல்லாருங்க!

Please Wait while comments are loading...