»   »  விஸ்தரிக்கும் சங்கீதா!

விஸ்தரிக்கும் சங்கீதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உயிர் நாயகி சங்கீதாவுக்கு வாய்ப்பு மழையும், பண மழையும் படு போடு போடுவதால் இதைப் பயன்படுத்திதனது சென்னை வீட்டை விஸ்தாரமாக கட்டும் வேலையை ஆரம்பித்து விட்டார்.

பல படங்களில் ரசிகா என்ற பெயரில் நடித்தும் ஒன்றும் கை கொடுக்காததால் தெலுங்குக்கு மாறினார் சங்கீதா.பின்னர் தனது பெயரை சங்கீதா என மாற்றிக் கொண்டு மீண்டும் தமிழுக்குத் தாவினார்.

பிதாமகனில் அவர் போட்ட கஞ்சா (வேடம்தான்!) நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. ஆனாலும் அவருக்குவாய்ப்புகள் அலை மோதவில்லை. விரக்தியின் விளிம்புக்கேப் போய் விட்ட சங்கீதாவுக்கு உயிர் கொடுப்பதுபோல வந்ததுதான் உயிர் படம்.

இப்படத்தின் நாயகன் ஸ்ரீகாந்த்தை விட அருந்ததி என்ற கேரக்டரில் நடித்த சங்கீதாவுக்குத்தான் ஏகப்பட்டவரவேற்பு. விளைவு, ஸ்ரீகாந்த்தை விட்டு சங்கீதாவின் நவ ரஸ போஸ்களைப் போட்டு விளம்பரப்படுத்தும்அளவுக்கு நிலைமை மாறிப் போனது.

உயிர் படத்திற்கு விமர்சனங்களும், சங்கீதாவின் நடிப்புக்கு பாராட்டும் சரமாரியாக வந்து குவிந்ததால், சங்கீதாஒரே படத்தில் டிமாண்டுக்குரிய நாயகியாகி விட்டார்.

தொடர்ந்து பல பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. எல்லாமே உயிர் படம் போன்றே இருந்ததால்,அவற்றையெல்லாம் மறுத்து விட்டு தனம், காசு என இரு படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்சங்கீதா.

இதில் காசு படத்தில் படு வித்தியாசமான கேரக்டராம். அதாவது காசுக்காக எதையும் செய்யத் துணியும்தெனாவட்டான கேரக்டரில் நடிக்கிறார் சங்கீதா. அதேபோல தனம் படத்தின் கதையும் கொஞ்சம் எக்குத்தப்பானதுதானாம். இதுவும் உயிர் போலவே சர்ச்சையை கிளப்பும் என சங்கீதாவே கூறுகிறார்.

வெறுமனே கிளாமராக நடித்து விட்டுப் போவதற்கு இதுபோல சமாச்சாரத்துடன் கூடிய படங்களில்நடிப்பதில்தான் வெயிட்டே இருக்கிறது என்கிறார் சங்கீதா. ஆண்களுக்குப் போட்டியாக நடிகைகளாலும் கலக்கமுடியும் என்பதை நான் உயிர் மூலம் நிரூபித்துள்ளேன். இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்றும்எதார்த்தமாக பேசுகிறார்.

தன்னைத் தேடி வரும் பல வாய்ப்புகளை பரிசீலனையில் வைத்துள்ள சங்கீதா தனது சம்பளத்தையும் கூட்டிவிட்டாராம். மேலும், தனது வீட்டையும் விஸ்தீரணப்படுத்தும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளார்.தற்போதுள்ள வீட்டை மறு சீரமைப்பு செய்து சில புதிய வசதிகளை ஏற்படுத்தி நவீனமாக்கப் போகிறாராம் சங்கீதா.

காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil