சங்கீதாவின் புலம்பல்

By Staff
Rasika
காளை படத்தில் தான் சம்பந்தப்பட்ட பல காட்சிகளை வெட்டி விட்டதாக புலம்பிக் கொண்டிருக்கிறாராம் சங்கீதா.

உயிர் படத்திற்கு முந்தைய சங்கீதாவை தமிழ் ரசிகர்கள் பெரிய அளவில் கவனிக்கவில்லை. ஆனால் சாமி இயக்கத்தில் உருவான உயிர் படத்தில், கொழுந்தன் மீது மோகமாக திரியும் அண்ணி வேடத்தில் நடித்த பின்னர் சங்கீதாவுக்கு மிகப் பெரிய மார்க்கெட் ஏற்பட்டு விட்டது.

படு பிசியாகி விட்ட சங்கீதா லேட்டஸ்டாக சிம்புவுடன் இணைந்து காளை படத்தில் நடித்தார்.

இந்தப் படத்திலும் கிட்டத்தட்ட உயிர் அருந்ததி கேரக்டர் போன்ற வில்லங்கமான பாத்திரம்தான். முதலில் இந்தப் பாத்திரத்திற்கு அழைக்கப்பட்டவர் சினேகா. அவர் மறுத்ததால், சங்கீதா புக் ஆனார்.

மருமகன் மீது ஆசைப்படும் அத்தை கேரக்டரில் இப்படத்தில் நடித்திருந்தார் சங்கீதா. இவரது கேரக்டர் சற்றே காமரசமாக இருந்ததாம்.

சிம்புவின் வலியுறுத்தலின்பேரில்தான் இந்த கேரக்டருக்கு காமரசம் பூசினாராம் இயக்குநர் தருண் கோபி.

ஆனால் படத்தை சென்சாருக்கு அனுப்பும் முன்பு சங்கீதாவின் கேரக்டரை ஒருமுறை பார்த்தபோது காமநெடி அதிகமாக இருந்ததாக உணர்ந்து பல காட்சிகளை வெட்டி விட்டார்களாம். இதனால் சங்கீதாவின் கேரக்டர் குண்டக்க மண்டக்க வெட்டுப் பட்டு விட்டதாம்.

இது சங்கீதாவை வருத்தமடைய வைத்துள்ளதாம். உயிர் படம் போல இந்தப் படமும் எனக்கு பிரேக் கொடுத்திருக்கும். ஆனால் நான் சம்பந்தப்பட்ட காட்சிகளை தேவையில்லாமல் தாறுமாறாக வெட்டி சொதப்பி விட்டார்களே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

வில்லங்கத்தை தவிர்க்கத்தான் எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் சங்கீதாவோ வலியக்க போய் வரவேற்கிறாரே, ரொம்ப வித்தியாசமான நடிகைதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X