மீண்டும் நடிக்க வருகிறார் அசாருதீன் மனைவி சங்கீதா!
ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மனைவி சங்கீதா பிஜ்லானி மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார்.
இந்திப்பட உலகில் பிரபலமாக இருந்தவர் சங்கீதா பிஜ்லானி. இவர் அசாருதீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிப்பை அத்துடன் கைவிட்டார்.

இவர் கடைசியாக நடித்த இந்திப் படம் 1996-ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார்.
இப்போது ஓனிர் தயாரிக்கும் 'ஷாப்' என்ற படத்தில் நடிகர் சல்மான்கானுடன் சேர்ந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தன் சினிமா மறுபிரவேசம் குறித்து சங்கீதா கூறுகையில், "நான் பல படங்களில் நடித்திருந்தாலும், இப்போது ஒரு புதுமுகம் போலத்தான் கேமரா முன் நிற்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மிதுன் சக்கரவர்த்தியுடன் பல படங்களில் நடித்தவள் நான். சல்மானுடன் இதற்கு முன் எனக்கு பழக்கமில்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











