விஜய் - திரிஷா ஜோடி போட்டு வருகை.. சங்கீதாவுக்கு சப்போர்ட் செய்யும் நடிகை.. ரொம்ப ஏமாற்றமாம்

சென்னை: விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா விவாகரத்து கேட்டிருக்கிறார். அந்த மனுவானது ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த விஷயத்தால் நிலைமை பற்றி எரிந்துகொண்டிருக்கிறது; ஆனால் விஜய்யும், திரிஷாவும் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் நேற்று தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமணத்துக்கு ஜோடியாக வந்தார்கள். அவர்களது இந்த செயல் பெரும்பாலானோரிடம் கண்டனத்தை பெற்றிருக்கிறது. பிரபல நடிகை சனம் ஷெட்டி கொதித்து போய் ட்வீட் செய்திருக்கிறார்.

விஜய்யின் மனைவியான சங்கீதா சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'விஜய்க்கு நடிகைக்கு மீறிய உறவு இருக்கிறது. அவர் ஐந்து வருடங்களாகவே என்னிடமிருந்து உணர்வு ரீதியாக விலகித்தான் வாழ்கிறார். நடிகையுடனான உறவை கண்டுபிடித்து கேட்கும்போது இனிமேல் அந்த உறவை தொடரமாட்டேன் என சொல்லிவிட்டு; இரக்கமே இல்லாமல் தொடர்ந்தார். என்னை சுதந்திரமாக நடமாட விடாமல் தடுத்தார். பொருளாதாரத்திலும் நெருக்கடியை ஏற்படுத்தினார்' என பல விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்.

Sangeetha Files Divorce From Vijay Trisha Appearance Sparks Fresh Controversy Sanam Shetty Reacts
Photo Credit:

யார் அந்த நடிகை?: சங்கீதாவின் அந்த மனு பெரிய பூகம்பத்தை தமிழ் திரைத்துறையிலும், அரசியல் களத்திலும் ஏற்படுத்தின. பெண்களின் பாதுகாப்பு பற்றி தொடர்ந்து சினிமாக்களிலும், மேடைகளிலும் பேசி வரும் விஜய்; தனது வீட்டுக்குள் இப்படித்தான் இருக்கிறாரா என அதிர்ச்சியுடன் கேள்விகள் எழுந்தன. மேலும் சங்கீதா குறிப்பிட்டிருக்கும் அந்த நடிகை யார் என்பது குறித்தும் அனைவருமே தீவிரமான தேடுதலில் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட குறிப்பிட்ட நடிகைதான் அது என பலரும் பேச தொடங்கிவிட்டார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட நடிகை எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

ஜோடியாக வந்த விஜய், திரிஷா: நிலைமை இப்படி இருக்க சென்னையில் நேற்று தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் மகன் திருமணம் நடந்தது. அதில் கோலிவுட்டிலிருந்து பெரும்பாலான பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக வந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த உடையும் ஒரே கலர் டோனில் இருந்தது. இதை பார்த்து தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும், ஆதரவாளர்களும் என்ன சொல்வதென தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

Also Read
Vijay Trisha: ஜோடியாக விஜய் த்ரிஷா.. வாழ்கனு வாழ்த்திய பிரபலம்.. கமெண்ட் செக்‌ஷனைப் பார்க்கனுமே!
Vijay Trisha: ஜோடியாக விஜய் த்ரிஷா.. வாழ்கனு வாழ்த்திய பிரபலம்.. கமெண்ட் செக்‌ஷனைப் பார்க்கனுமே!

வலுக்கும் கண்டனம்: அதேசமயம் அவர்கள் ஒரே காரில் வரவில்லை என்றெல்லாம் கூறுகிறார்கள்தான். ஆனால் அதெல்லாம் எடுபடவில்லை. மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமலேயே; இந்த சர்ச்சையில் இருக்கும் ஒரு நடிகையுடன் விஜய் எப்படி வரலாம்?.. இது மேற்கொண்டு எதிராளிகளுக்கு சலங்கை கட்டிவிட்டது போல்தான். இந்த விஷயங்களை எல்லாம் அவரது மகனும், மகளும் பார்த்தால் எவ்வளவு வலிக்கும் என கமெண்ட்ஸ்களும், பதிவுகளும் பறக்கின்றன. மேலும் சிலரோ விஜய் மீது தங்கள் அதிருப்தியை ஓபனாக தெரிவித்து; தவெகவிலிருந்து விலகுவதாகவும் ஓபனாகவே சொல்ல தொடங்கிவிட்டார்கள். இந்த விஷயம் விஜய்க்கு Back Fire ஆகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

சனம் ஷெட்டி பதிவு: இந்நிலையில் பிரபல நடிகையும், விஜய்யின் தீவிரமான ஆதரவாளருமான சனம் ஷெட்டி தனது எக்ஸ் தளத்தில் இதுகுறித்து வருத்தத்துடன் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "இது சரியான வழி இல்லை. மனைவியின் துயரத்தை இப்படி புறக்கணிக்க முடியாது, கூடாது. நீண்ட கால ரசிகையாக இந்த நேரத்தில் இதை பார்க்க மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது" என குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக, விஜய்க்கு எதிராக பல விஷயங்களில் விமர்சனங்கள் எழுந்தபோது சனம் ஷெட்டி முழுக்க முழுக்க சப்போர்ட் செய்து பதிவுகளும், வீடியோகளும் போட்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X