என்னிடம் கேட்காமல் அவர் எதையும் செய்வதில்லை.. ரெடின் கிங்ஸ்லி பற்றி மனைவி சங்கீதா பெருமிதம்

சென்னை: ரெடின் கிங்ஸ்லி இப்போது தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது உடல்மொழியும், டயலாக் டெலிவிரியும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருக்கின்றன. கடைசியாக அவரது நடிப்பில் கங்குவா, ப்ளடி பெக்கர் உள்ளிட்ட படங்கள் வந்தன. அவர் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சமீபத்தில்தான் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ரெடின் பற்றி சங்கீதா பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

சினிமாவில் நடன குழுவில் குரூப் டான்ஸராக தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் ரெடின் கிங்ஸ்லி. அதற்கு பிறகு நடன பள்ளி ஒன்றையும் வைத்து சினிமாவுக்குள் தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தார். அந்த சமயத்தில் நெல்சன் திலீப்குமார் கல்லூரி படிக்கும்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நெல்சனுடன் ரெடினை நெருக்கமாக்கியது. மேலும் நெல்சன் இயக்கி பாதியில் கைவிடப்பட்ட படமான சிம்பு நடித்த வேட்டை மன்னன் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார் ரெடின் கிங்ஸ்லி

கோலமாவு கோகிலா: அதன் பிறகு சில வருடங்கள் கழித்து நயன்தாரா, யோகிபாபு கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார் நெல்சன். அதில் நடித்த ரெடின் கிங்ஸ்லி முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்தார். இருந்தாலும் அவருக்கு புகழ் வெளிச்சத்தை பெறுக்கொடுத்த படம் என்றால் அது சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படம்தான். அந்தப் படம் மெகா ஹிட்டடித்து 100 கோடி ரூபாயை வசூல் செய்தது.

தொடர்ந்து வாய்ப்புகள்: டாக்டர் படத்துக்கு பிறகு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்திவருகிறார் ரெடின். எனவே கோலிவுட்டில் இப்போது குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக ப்ளடி பெக்கர், கங்குவா திரைப்படங்கள் வெளியாகின. அடுத்ததாக அவரது நடிப்பில் பல படங்கள் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Sangeetha Open Talks about Redin Kingsley and Marriage Life
Photo Credit:

திருமணம் செய்துகொண்ட ரெடின்: இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து சிம்ப்பிளாக திருமணம் செய்துகொண்டார். சங்கீதாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது மைசூரில் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். அது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திருமணத்தில் தங்களுக்கு நெருக்கமானவர்களை மட்டுமே அவர்கள் அழைத்திருந்தார்கள்.

வீட்டுக்கு வந்த வரவு: இது ஒருபக்கம் இருக்க சங்கீதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதாக பேசப்பட்டு புகைப்படமும் வெளியானது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த சங்கீதா; அந்த குழந்தை தனது குழந்தை இல்லை என்று தெரிவித்தார். சூழல் இப்படி இருக்க சமீபத்தில்தான் ரெடின் கிங்ஸ்லிக்கும் சங்கீதாவுக்கும் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ரெடின் பற்றி சங்கீதா பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

சங்கீதா பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "நாங்கள் திருமணம் செய்துகொண்ட பிறகு அவர் என்னிடம் கேட்காமலோ, டிஸ்கஸ் செய்யாமலோ எதையும் செய்ததில்லை. நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்துதான் அத்தனையையும் செய்வோம். இப்போதைக்கு நாங்கள் அதிகமாக எங்கள் குழந்தைக்குத்தான் பர்சேஸ் செய்கிறோம். சமீபத்தில்கூட ஷாப்பிங் சென்று பாப்பாவுக்குத்தான் துணிகள் எல்லாம் வாங்கி வந்தோம்" என்றார். சங்கீதாவின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டுவருகிறது. மேலும் ரெடின் ஆளே மாறிட்டாரே என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X