Holi 2026: சங்கவி முதல் இந்திரஜா வரை.. ஹோலி கொண்டாடிய விஜய் பட நடிகைகள்.. ஒரே வண்ண மயம்தான்!
சென்னை: ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஹோலி வாழ்த்துகளுடன் போஸ்ட் போட்டு வைரலாக்கி வருகின்றனர். நடிகர் விஜய் இன்று தஞ்சாவூரில் பேச உள்ள நிலையில், அவரை வழிநெடுக ரசிகர்களும் தொண்டர்களும் சூழ்ந்துக் கொண்டு பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை சங்கவி மற்றும் விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்த நடிகை இந்திரஜா உள்ளிட்ட பிரபலங்கள் ஹோலி கொண்டாடிய போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

பாலிவுட் பிரபலங்கள் நேற்று முதலே ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், நம்ம ஊரில் இந்த முறை ஏஐ எடிட்கள் மூலமாகவும் ஹோலி கொண்டாடியது போல போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
சங்கவி ஹோலி கொண்டாட்டம்: அஜித் குமாரின் அமராவதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சங்கவி சமீப காலமாக சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களில் கலக்கி வருகிறார். விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ள சங்கவி ஹோலியை முன்னிட்டு ஏஐ எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்றை ஷேர் செய்து ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பிகில் நடிகையின் ஹோலி ஸ்பெஷல்: அப்பா ரோபோ சங்கர் மறைந்ததை தொடர்ந்து மனவேதனையில் ஆழ்ந்த இந்திரஜா சங்கர் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து விலகி மீண்டும் பழையபடி தனது கணவருடன் சேர்ந்து சோஷியல் மீடியாவில் போஸ்ட்டுகளை பதிவிட்டு பிசியாகி உள்ளார். ஹோலி கொண்டாடியது போன்று உருவாக்கப்பட்ட ஏஐ போட்டோக்களை அவரும் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஹோலியை கூட கலர் பூசி கொண்டாடாமல் இப்படி ஏஐ வச்சே காலத்தை ஓட்டிடுவாங்க போல தெரிகிறதே என கலாய்த்து வருகின்றனர்.
பிரியங்கா சோப்ரா ஹோலி பிக்ஸ்: விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்த நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் ஹோலி கொண்டாடிய த்ரோபேக் புகைப்படங்களை அவரது கணவர் நிக் ஜோனஸ் சற்றுமுன் ஷேர் செய்து வாழ்நாளில் மறக்க முடியாத ஹோலி என பதிவிட்டுள்ளார். வாரணாசி படப்பிடிப்பில் பிசியாக உள்ள நிலையில், இந்த முறை ஹோலி கொண்டாட்டத்திற்கு பிரியங்கா சோப்ரா ஃப்ரீயாக இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை ஏகப்பட்ட பிரபலங்கள் ஹோலி கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











