»   »  பூஜா ஆன கொக்கி சஞ்சனா

பூஜா ஆன கொக்கி சஞ்சனா

Subscribe to Oneindia Tamil

கொக்கியில் சரணுடன் இணைந்து ஜமாய்த்த கொல்கத்தா ஸ்வீட் பேபி சஞ்சனா தனது பெயரை பூஜா சாந்தி என்றுமாற்றி விட்டார்.

சென்டிமெண்ட் புகழ் பட இயக்குனர் பி.வாசுவின் புத்திரன் ஷக்தி ஹீரோவாக நடிக்கும் படம் தொட்டால் பூமலரும். இதையும் வாசு தான் இயக்குகிறார். இப்படத்தில் ஷக்திக்கு ஜோடி போட்டிருப்பவர் சஞ்சனா.

அழகான சஞ்சனா என்ற பெயரை இப்போது பூஜா சாந்தி என்று மாற்றி விட்டாராம் சஞ்சனா. ஏம்மா இப்படிஎன்று சஞ்சுவிடம் போய்க் கேட்டால், அய்யே, என்னோட ஒரிஜினல் பெயரே பூஜா சாந்திதான். ஆனால்ஏற்கனவே ஒரு பூஜா இருப்பதால், எனது பெயரை சஞ்சனா என்று கொக்கி யூனிட் மாற்றி விட்டது. இப்போதுஎனது ஒரிஜினல் பெயருக்கே மாறி விட்டேன் என்கிறார் புஜ்ஜி பாப்பா பூஜா.

மும்பையிலிருந்து வரும் குட்டிகள் எல்லாம் கொடக் மடக்கென கிளாமரில் புயலைக் கிளப்புகிறார்களே, நீங்கஎப்படி என்று சஞ்சனா என்ற பூஜாவிடம் கேட்டால், நிச்சயமாக கிளாமர் கேரக்டரிலும் நடிப்பேன். ஆனால்அதற்காக எல்.ஓ.சி.யை மீற மாட்டேன் என்று குறும்புப் புன்னகை பூக்கிறார்.

அப்படீன்னா முத்தாவுக்கும் ஓ.கே.வா? தேவைப்பட்டால் முத்தம் கொடுத்தா என்ன தப்பு? காட்சிக்குத் தேவைஎன்றால் கொடுக்கவும் தயார்தான். முத்தம் கொடுக்க வேண்டிய அவசியமான காட்சி என்று இயக்குனர்விருப்பப்பட்டால் அதில் ஆபாசம் இல்லாமல் கேமராமேன் படம் பிடிக்கத் தயார் என்றால் தைரியமாக உம்மாகொடுக்க வேண்டியது தான் என்று படு தில்லாக கூறுகிறார் பூஜா.

முதல் படத்திலேயே சஞ்சனா படு முறுக்காக வந்து போனார். கிளாமருக்கும் தயங்காதவர் என்று முதல்படத்திலேயே தெரிந்தது. ஆனால் இப்போது முத்தக் காட்சிக்கும் தான் ரெடி என்று படு தில்லாக கூறியுள்ளார்சஞ்சனா.

தொட்டால் பூ மலரும் படத்திலும் முத்தக் காட்சிகளுக்கும், கிளாமருக்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறதாம்.பிரம்மாதமாக பின்னி எடுக்க காத்துள்ளாராம் பூஜா.

அமர்க்களமான பூஜைதான் போங்கோ...

Read more about: sanjana becomes pooja santhi
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil