அம்மிக்கல்,நாய்க்குட்டி ,வாட்டர் கேன் எதுக்கடைச்சாலும்... உடற்பயிற்சி செய்ய நான் ரெடி

சென்னை : குடும்பப்பாங்கான கதாபாத்திரத்திற்கு மவுசு கொஞ்சம் கம்மி தான் என்று தெரிந்த நடிகைகள் அனைவரும் கவர்ச்சி என்ற கோதாவில் குதித்துவிட்டனர் கவர்ச்சி என்று வந்துவிட்டால் அதில் யாருமே பஞ்சமே வைப்பதில்லை.

Recommended Video

Chaya Singh rare dance video | Aishwarya Dutta• Bigg Boss

கவர்ச்சி என்று வந்துவிட்டால் அது நடனமாக இருந்தாலும் சரி நடிப்பாக இருந்தாலும் சரி வெளுத்துக்கட்டுகின்றனர் இப்பொது இருக்கும் பல ஹீரோயின்கள் .ஆனால் கவர்ச்சி என்றால் அது சாதாரணமான விஷயம் இல்லை .அதற்கு முக்கிய தேவை உடல் அழகு .

உடலை கட்டுகோப்பாக வைத்துருக்க வேண்டும் என்பதில் நமது ஹீரோயின்கள் பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.அதற்காக அவர்கள் பெரும் அளவில் ஆண்களுக்கு நிகராக உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கின்றனர். அதிலும் சஞ்சனாவிற்கு உடற்பயிற்சி என்றால் அவ்ளோ இஷ்டம்.

தொடர்ந்து ஏறுமுகம்

தொடர்ந்து ஏறுமுகம்

வசீகரிக்கும் காந்த கண்களும், பார்க்க பார்க்க திகட்டாத கிளாமரும் கொண்ட சஞ்சனா சிங். இவர் தமிழில் முதன் முதலில் ரேணிகுண்டாவில் அறிமுகமாகி தனது சிறப்பான நடிப்பை முதல் படத்திலே வெளிப்படுத்தி இருந்தார். அதற்கு அடுத்து வந்த கோ படத்தில் "அக நக" என்ற ஒரே ஒரு பாடலின் மூலம் இவரின் பெயர் மார்க்கெட்டில் இன்னும் உயர்ந்தது . அதற்கு பிறகு அஞ்சான்,தனி ஒருவன் என ஒரே ஏறுமுகம் தான். தொடர்ந்து தமிழ் மற்றும் ஹிந்தி என பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தனது கிளாமர் போட்டோக்களை எல்லோரும் அசரும் வகையில் சமூகவலைத்தளங்களில் தெறிக்க விடுகிறார். .

அம்மிக்கல் உடற்பயிற்சி

அம்மிக்கல் உடற்பயிற்சி

அதேபோல் சஞ்சனா தினமும் உடற்பயிற்சி மற்றும் யோக செய்து தன்னை எப்போதும் ஃபிட்டாக வைத்துக்கொள்வார் ஆனால் இப்போது ஜிம் ஏதுவும் ஓபன் ஆகாததால், வீட்டில் இருக்கும் அம்மிக்கல், தண்ணி கேன், நாய்க்குட்டி போன்று என்னவெல்லாம் கையில் கிடைக்கிறதோ அதையெல்லாம் வைத்து தனது டெய்லி ஒர்கவுட்டை செய்து அதை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

கட்டாயம் தேவை

கட்டாயம் தேவை

சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் பள்ளிகளில் கட்டாயம் செக்ஸ் கல்வி வேண்டும். அதை பற்றி அவர்கள் பள்ளியிலிருந்தே படித்தால் நாட்டில் நடக்கும் பல தேவையற்ற குற்றங்களை தடுக்கலாம் என்று கூறினார் , தான் இனிமேல் ஐடம் பாடல்களில் நடிப்பதை தவிர்த்து வருவதாகவும் அதற்கு காரணம் அதே போன்ற வாய்ப்புகள் தொடர்ந்து வருவதால் தன்னுடைய முழுமையான திறமையை வெளிப்படுத்த முடியவில்லை என்றும் ஒரு நல்ல ரோலில் நடிக்க நிறைய கதைகளை கேட்டுவருவதாகவும் தெரிவித்தார். மேலும் தான் ஒரு தயாரிப்பாளராவும் ஆக போவதாய் கூறினார்.

டெக்னாலஜி உதவி

டெக்னாலஜி உதவி

இந்த லாக்டவுன் சமயத்தில் அனைவரும் தங்களை அழகுபடுத்திக்கொள்ள எப்படா பியூட்டி ஃபார்லர் திறப்பாங்க என்று எல்லாரும் கத்திருக்கும் வேளையில், தனது முடியை தானே வெட்டி அழகுபடுத்தி கொண்டார் . அதற்கு தனது தோழி வசந்தா தான் வீடியோ காலின் மூலம் உதவினார் எனவும் இந்தமாதிரி இக்கட்டான சூழ்நிலைகளில் டெக்னாலஜி நமக்கு மிகவும் உதவுகிறது என தனது ரசிகர்களிடம் லைவ் வீடியோவில் அதை சொல்லி பகிர்ந்தார் .

முன்னழகு டப்ஸ்மாஷ்

முன்னழகு டப்ஸ்மாஷ்

மேலும் அந்த வீடியோ கால் முடிந்தவுடன் தனது முன்னழகை காட்டியபடி ஒரு சூப்பர் டப்ஸ்மாஷும் செய்தும் வெளியிட்டார். பூஸ்ட் ஐஸ் தி சீக்ரட் ஆப் சஞ்சனா எனர்ஜி என்றவாறு தனக்கான பாணியில் முத்தத்தங்களை கடைசியில் அவர்களுக்கு அள்ளி வீசினார் சஞ்சனா.அதனை பார்த்த ரசிகர்களும் மிரண்டுபோய்விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X