அதை மட்டும் செய்யாதீங்க.. உங்கள் மனது ரொம்ப பாதிக்கும். அட்வைஸ் செய்த நடிகர்.. சட்டை செய்யாத ஐஸ்வர்யா ராய்
மும்பை: பாலிவுட் உலகில் கடந்த சில காலமாக பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்பதுதான். அதில் உண்மை இல்லை என்று கூறப்பட்டாலும் தொடர்ந்து அந்த கிசுகிசு பரவியேவருகிறது. இதுகுறித்து இருவருமே தங்களது செயல்பாடுகள் மூலம் பதிலளித்துவருகின்றனர். இந்தச் சூழலில் ஐஸ்வர்யா ராய் பற்றி நடிகர் சஞ்சய் தத் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராய் என்றாலே உலக அழகி என்ற நினைவுதான் ரசிகர்களிடம் வரும். 90களில் உலக அழகி பட்டம் வென்ற அவரை இந்தியாவில் பலரும் இன்றுவரை உலக அழகியாகவே கொண்டாடிவருகிறார்கள். கோலிவுட்டில் அவர் அறிமுகமானாலும் அவரின் கவனம் பெரும்பாலும் பாலிவுட்டிலேயே இருந்தது. அங்கு ஏராளமான ஹிட் படங்களில் நடித்து பெரும் ரவுண்டு வந்தார். அதேபோல் தமிழிலும் மணிரத்னம், ஷங்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட இயக்குநர்களின் படங்களில் நடித்திருக்கிறார்கள்.

சல்மான் கானுடன் காதல்: அவர் பாலிவுட்டில் பீக்கில் இருந்தபோது நடிகர் சல்மான் கானை காதலித்தார். சில வருடங்கள் இரண்டு பேருமே தீவிரமாக காதலித்தார்கள். நிச்சயம் திருமணம் செய்துகொள்வார்கள் என்று ஆரூடம் கூறப்பட்ட சூழலில்; தங்களுக்குள் ஒத்துவராததால் இருவரும் பிரிந்தனர். அதற்கு காரணம் சல்மான் கான் ஐஸ்வர்யாவை ரொம்பவே டார்ச்சர் செய்துவிட்டார் என்று சொல்லப்பட்டது. இருந்தாலும் தங்களது பிரிவு குறித்து இருவருமே எதுவும் பேசவில்லை.
பச்சன் குடும்பத்து மருமகள்: சல்மானுடனான பிரிவுக்கு பிறகு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஐஸ். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். பல வருடங்களாக இரண்டு பேரும் காதலோடும், அனுசரனையோடும் தங்களது வாழ்க்கை நகர்த்திவருகிறார்கள். மேலும் பாலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி என்ற அந்தஸ்தையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி வாழ்ந்தால் அவர்கள் போல் வாழ வேண்டும் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்கள்.
குடும்பத்தில் பிரச்னை?: சூழல் இப்படி இருக்க கடந்த சில காலமாக இருவருக்கும் பிரச்னை என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராயை அபிஷேக்கின் தாய் ஜெயா ஓவராக அதிகாரம் செய்கிறார்; அதனால் கடுப்பான ஐஸ்வர்யா தனது குழந்தையும் தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார் என்றெல்லாம் கிளப்பிவிடப்பட்டது. ஆனால் அதனை ஜெயா மறுத்து; ஐஸ்வர்யாவை நான் எப்போதும் அதிகாரம் செய்ததில்லை என்று விளக்கம் கொடுத்தார். அபிஷேக்கும் தங்களுக்குள் விவாகரத்தெல்லாம் என்று கூறினார்.
முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா: இது ஒருபக்கம் இருக்க திருமணத்தின்போது போடப்பட்ட மோதிரத்தை ஐஸ்வர்யா கழற்றிவிட்டார்; எனவே விவாகரத்து உறுதி என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அந்த மோதிரத்தை போட்டுக்கொண்டு பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் சமீபத்தில் அமிதாப் பச்சனின் பிறந்தநாளுக்குக்கூட தனது வாழ்த்தினை தெரிவித்து விவாகரத்து சர்ச்சையை கிளப்பியவர்களை கப் சிப் என்று ஆக்கினார்.
சஞ்சய் தத்: இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத் பேசியிருக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், “ஒரு விளம்பர படப்பில்தான் ஐஸ்வர்யா ராயை முதன்முதலாக பார்த்தேன். அப்போது அவரிடம், 'நீங்கள் திரையுலகில் நுழைய வேண்டாம். அங்கு கடினமான போட்டிகள் இருக்கும். உங்கள் அழகையும், மனதையும் பாதிக்கும். இந்த அழகு கெட்டுவிடக்கூடாது என்று சொன்னேன். மேலும் நீங்கள் இரண்டு படி மேலே சென்றாலும் 500 பேர் உங்களை கீழே இழுப்பார்கள் என்றேன். ஆனால் அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவே இல்லை” என்றார்.


Click it and Unblock the Notifications