கீர்த்தி சுரேஷ் மாதிரி நானும் அந்தக் கூத்தை அடிச்சேன்.. தவறெல்லாம் இல்ல.. சஞ்சீவ் மனைவி ஓபன் டாக்

சென்னை: கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் ஹிந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் கோவாவில் நடைபெற்றது. இதில் விஜய், அட்லீ, திரிஷா, ப்ரீத்தி, டிடி,கல்யாணி ப்ரியதர்ஷன் என நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது. திருமணத்துக்கு பிறகும் கீர்த்தி நடிப்பார் என்றே கருதப்படுகிறது. இந்நிலையில் அவர் குறித்து நடிகர் சஞ்சீவ்வின் மனைவி ப்ரீத்தி சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

தமிழில் நடிகையாக இருந்த மேனகாவுக்கு பிறந்தவர் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் அதிரிபுதிரி ஹிட்டடித்ததை தொடர்ந்து கீர்த்திக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி முன்னணி நடிகை என்ற நிலைக்கு நகர்ந்தார்.

keerthy suresh preethi sanjeev

தேசிய விருது: அவர் எவ்வளவுதான் சிறந்த முறையில் நடித்தாலும் அவரை ட்ரோல் செய்வதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. சூழல் இப்படி இருக்க தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார் அவர். இருந்தாலும் அவர் எதிர்பார்த்தபடி அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் சில வருடங்களுக்கு கிடைக்கவில்லை. பிறகு தமிழில் மாமன்னன், சைரன் என வரிசையாக நடித்தார்.

காதல்: தமிழ், தெலுங்கில் மட்டும் நடித்துவந்த அவர் ஹிந்தியிலும் காலடி எடுத்துவைத்தார். அந்தவகையில் அட்லீ தயாரிப்பில் உருவான தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இதற்கிடையே அவர் கடந்த 15 வருடங்களாக ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வந்திருக்கிறார். இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்டனியை அறிமுகம் செய்துவைத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

திருமணம்: இருவரது காதலும் கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. அவர்களின் திருமணம் கோவாவில் ஹிந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் பிரமாண்டமாக நடைபெற்றது. அவர்களது திருமணத்தில் விஜய், திரிஷா, அட்லீ, ப்ரீத்தி, கல்யாணி ப்ரியதர்ஷன் என பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணத்துக்கு பிறகு பேபி ஜான் ப்ரோமோஷனில் தீவிரமாக கலந்துகொண்டார் கீர்த்தி. எனவே அவர் தொடர்ந்து நடிப்பார் என்றே கருதப்படுகிறது.

ப்ரீத்தி பேட்டி: சூழல் இப்படி இருக்க பேபி ஜான் ப்ரோமோஷனில் கலந்துகொண்டபோது தாலி தெரியும்படிதான் வந்தார் கீர்த்தி. அதனை பலரும் விமர்சித்தார்கள். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சஞ்சீவின் மனைவி ப்ரீத்தி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "புதிதாக திருமணம் ஆன அனைவருமே இதை செய்வார்கள். நானும் இந்த கூத்தை அடித்திருக்கிறேன். அந்த மஞ்சள் கயிறு ஒரு நல்ல ஃபீலிங்கை கொடுக்கக்கூடியது. நயன்தாராவும் மஞ்சள் கயிறு தெரியும்படிதான் சில நாட்கள் ஃபோட்டோக்களை போட்டார். ஏர்போர்ட்டில்கூட கீர்த்தி சுரேஷ் சல்வார் போட்டிருந்தார். அப்போது தாலி வெளியில் தெரியவில்லை. ஆனால் பேபி ஜான் ப்ரோமோஷனில் கீர்த்தி அணிந்திருந்த உடையால் தாலி வெளியில் தெரிந்தது. இதில் தவறு எதுவும் இல்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X