சந்தானம் பட நடிகைக்கு கொரோனா…மருத்துவமனையில் அனுமதி!

சென்னை : சந்தானம் பட நடிகை வைபவி சாண்டில்யா கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் மீண்டும் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2வது அலை

2வது அலை

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 56,211 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 271 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் 37,028 பேர் குணமடைந்துள்ளனர்.

மாஸ்க் கட்டாயம்

மாஸ்க் கட்டாயம்

தமிழகத்திலும் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் என்றும் தமிழக அரசு தெரிவித்து வருகிறது.

கொரோனா

கொரோனா

கொரோனா வைரலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சச்சின் டெண்டுல்கர், அமீர் கான், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலருக்கு கோவிட் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி

தொற்று உறுதி

இந்நிலையில் தமிழில் சந்தானத்துடன் சக்கபோடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் மற்றும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வைபவி சாண்டில்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.பசியின்மை மற்றும் சுவை மற்றும் வாசனை இன்மை, இருமல் இருந்ததால் சோதனை மேற்கொண்டதாகவும், சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X