நெளிவு சுளிவுடன்.. கார்னியா டான்ஸ்.. ஆட்டம் போட்ட சன்யா மல்ஹோத்ரா !

சென்னை : சன்யா மல்ஹோத்ரா டான்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ பார்ப்பவர்களை கவரும் வண்ணம் இருக்கிறது.

தங்கல் படத்தில் அமீர் கானுக்கு மகளாக நடித்த பபிதா குமாரியின் உண்மையான பெயர் சன்யா மல்ஹோத்ரா. செலெக்ட்டிவ்வாக சில படங்களிலேயே நடித்தாலும், நடிப்பில் குறை ஏதும் கூறமுடியாத படி நடித்திருப்பார். அதற்கு உதாரணம் தங்கல் படம் தான்.

இவருக்கு நடிப்பு மட்டும் இல்லாமல் "சீக்ரெட் சூப்பர் ஸ்டார்" என்ற படத்தில் வரும் "செக்சி பலியே" என்ற பாடலுக்கு நடன இயக்குனராகவும் இருந்து இருக்கிறார். தற்போது லுடோ, சகுந்தலா தேவி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

 அழகான சுருட்டை முடி

அழகான சுருட்டை முடி

சிறு பிள்ளையாக தங்கல் படத்தில் பார்த்த நமக்கு இவரது தற்போதைய புகைப்படம் பார்த்தால் ஆச்சரியமாக தான் இருக்கும். சுருட்டை முடியுடன் லக்ஷணமாகவே இருக்கிறார் சன்யா மல்ஹோத்ரா. தங்கல் படத்தில் அவர் நடிப்பு யாராலும் மறக்க முடியாது. எத்தனை முறை டிவியில் பார்த்தாலும் சலிப்பு தட்டாத படங்களில் அந்த படமும் ஒன்று. டி.ஆர்.பியில் எல்லா சானல்களையும் பின் தள்ளிவிடும் என்பதில் சந்தேகம் ஒன்றும் இல்லை .

 இணையத்தில் பிஸி

இணையத்தில் பிஸி

இந்த ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் வீட்டில் இருந்த படியே சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கிறார் சன்யா. அன்றாடம் பல விதவிதமான புகைப்படங்கள் எடுத்து அதை பதிவேற்றிக் கொண்டிருக்கும் இவர், சமீபத்தில் டான்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ பார்ப்பவர்களை கவரும் வண்ணம் இருக்கிறது.

 சூப்பர் டான்ஸ்

சூப்பர் டான்ஸ்

புருவத்தை அசைக்கும் அழகிலே இவர் டான்சில் டாப் டக்கர் என்று நமக்கு புரிந்துவிடுகிறது. பல நெளிவு சுளிவு ஆட்டத்தை போட்டு தாக்கி இருக்கிறார் சன்யா. மேலும், கோரியோக்ராபி ஆன் கார்னி என்றும் அவர் பதிவிட்டு இருக்கிறார். இவர் ஆடும் நடனம் தமிழ் ரசிகர்களுக்கு சற்று வித்யாசமாக தான் இருக்கிறது. ஆனால் ரசிக்கும் படியாக இருக்கிறது என்பது கூடுதல் பலம்.

 பபிதாவா இவர்

பபிதாவா இவர்

இவர் ஆடிய நடனத்தை பார்க்கும் நமக்கு பபிதாவா இது என்ற சந்தேகமே வருகிறது. குத்து சண்டை வீராங்கனையாக பார்த்த நமக்கு இது கொஞ்சம் வித்யாசமாக தான் இருக்கிறது. தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர், அன்றாடம் சன்யா பதிவிடும் புது விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் சிலர் ஹாட் கமெண்ட்ஸ்ஸும் போட்டு வருகின்றனர் . இந்த ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு இவரது மூன்று படங்களிலும் இவரது ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்றும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X