இந்த வாரிசு நடிகைக்கு கண்ணடிக்க தெரியலையாம்யா
மும்பை: சிம்பா பட ஹீரோயின் சாராவுக்கு கண்ணடிக்கவே தெரியவில்லை என்று இயக்குனர் ரோஹித் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
மசாலா படங்கள் கொடுப்பதில் மன்னனான ரோஹித் ஷெட்டி ரன்வீர் சிங் மற்றும் சாரா அலி கானை வைத்து இயக்கியுள்ள இந்தி படம் சிம்பா. படம் நாளை ரிலீஸாக உள்ளது.
படத்தை விளம்பரம் செய்யும் வேலையில் ரோஹித், ரன்வீர், சாரா ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

ஹிட்
சிம்பா படத்தில் வரும் ஆங்க் மாரே என்ற பாடல் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. ஆங்க் மாரே அதாவது கண்ணடி என்று வரும் பாடலில் ஆடிய சாரா அலி கானுக்கு கண்ணடிக்கவே தெரியவில்லையாம். இதனால் பாடலை படமாக்குவதில் லைட்டா கஷ்டப்பட்டுள்ளார் இயக்குனர் ரோஹித்.

ரோஹித்
சாராவுக்கு கண்ணடிக்க தெரியாததால் பல முறை டேக் வாங்கினார். அவர் சரியாக கண்ணடிக்கும் வரை நான் அவரை விடவில்லை என்று ரோஹித் ஷெட்டி தெரிவித்துள்ளார். சாராவுக்கு கண்ணடிக்க தெரியவில்லை. ஆனால் ப்ரியா பிரகாஷ் வாரியரோ கண்ணடித்ததால் தான் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள்
பயிற்சி கொடுத்தும் சாராவுக்கு சரியாக கண்ணடிக்கத் தெரியவில்லை. அதனால் கேமரா ஆங்கிளை மாற்றிக் கொண்டே இருந்தோம். ஆங்க் மாரே பாடல் வீடியோவில் சாரா கண்ணடித்தது தெரியாதது தான் நல்ல விஷயம். அந்த பாடல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்று கூறி மகிழ்கிறார் ரோஹித் ஷெட்டி.

இயக்குனர்
சிம்பா படத்தில் சாரா அலி கானை ஹீரோயினாக நடிக்க வைக்குமாறு அவரை வைத்து கேதர்நாத் படத்தை இயக்கிய அபிஷேக் கபூர் ரோஹித்திடம் பரிந்துரை செய்தது தெரிய வந்தது. கேதர்நாத் படம் மூலம் தான் சாரா நடிகையானார். ஒரே ஆண்டில் அவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகின்றது.


Click it and Unblock the Notifications











