முகத்துக்கு நேராக உடைந்த குண்டு பல்பு.. பயந்துபோய் அலறிய தனுஷ் பட ஹீரோயின்.. என்ன ஆச்சு?
சென்னை: தனுஷின் அட்ரங்கி ரே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை சாரா அலி கான் முகத்துக்கு அருகே பல்பு ஒன்று திடீரென வெடித்து சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சைஃப் அலி கானின் மகளும் பாலிவுட்டின் இளம் நடிகையுமான சாரா அலி கான் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம் போல மேக்கப் ரூமில் மேக்கப் போட்டுக் கொண்டு ரெடியாகி வந்த நிலையில், திடீரென அருகே இருந்த பல்ப் ஒன்று வெடித்ததில் சாரா அலி கான் பயந்தே போய் விட்டார்.

சாரா அலி கான்
நடிகர் சைஃப் அலி கானுக்கும் அவரது மூத்த மனைவிக்கும் மகளாக பிறந்தவர் சாரா அலி கான். பாலிவுட்டில் நடிகர்களின் வாரிசு என்று சொன்னாலே வாய்ப்பு உங்கள் வீட்டு கதவைத் தேடி வரும் என்பது போல சாரா அலி கானுக்கும் ஏகப்பட்ட பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

சுஷாந்த் சிங் படத்தில் அறிமுகம்
2018ம் ஆண்டு நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான கேதார்நாத் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் சாரா அலி கான். ரன்வீர் சிங் உடன் சிம்பா அதனை தொடர்ந்து லவ் ஆஜ் கல், கூலி நம்பர் ஒன் என பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

தனுசுக்கு ஜோடி
சமீபத்தில் ஒடிடி தளத்தில் வெளியான அட்ரங்கி ரே படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சாரா அலி கான். தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலி கான் நடிப்பில் உருவான அந்த படத்தை இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கி இருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இந்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பல்பு வெடித்தது
இந்நிலையில், அடுத்ததாக நடிகர் விக்கி கெளஷல் படத்தில் நடித்து வருகிறார் சாரா அலி கான். அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக மேக்கப் போட்டு தயாராகிக் கொண்டிருந்த நிலையில், திடீரென அவரது முகத்துக்கு அருகே இருந்த பல்பு ஒன்று சூடு தாங்காமல் வெடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பதறிப்போன சாரா
கடந்த ஞாயிற்றுக் கிழமை மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், படாரென பல்பு வெடிக்கவும் நடிகை சாரா அலி கான் பதறிப்போய் பயந்ததை அருகே இருந்தவர் படம் பிடித்து விட்டார். அந்த வீடியோவை இணையத்தில் வைரலாக நடிகை சாராவுக்கு என்ன ஆச்சு என்றும் இப்படியா குழந்தை மாதிரி பயப்படுவீங்க என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











