வெட்கமே கிடையாதா? இப்படியா டிரெஸ் பண்ணுவீங்க? கொடுமை... ஹீரோயினை பச்சையாகத் திட்டிய ரசிகர்கள்
மும்பை: ஹீரோயினின் பிகினி புகைப்படத்தைக் கண்டு ரசிகர்கள் சரமாரியாக வெளுத்துவாங்கியுள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் மகள் மகள் சாரா அலிகான். இந்திப் படங்களில் ஹீரோயினாக நடித்துவருகிறார். பாலிவுட்டின் இளம் ஹிரோயினான இவர், அடிக்கடி ஹாட் பிகினி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
மற்ற ஹீரோயின்களுக்கு போட்டியாக இவர் பதிவிட்டு வரும் பிகினி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மாலத்தீவு
விடுமுறைக்காக இவர் தனது அம்மா, அமிர்தா மற்றும் சகோதரர் இப்ராஹிமுடன் மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு அவர், நீச்சல் குளத்தில் இருந்தபடி தினமும் ஒவ்வொரு ஹாட் பிகினி புகைப்படங்களையாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
விமர்சனம்
அந்தப் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் அவர் நேற்று பதிவிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பிகினி போட்டியா?
'ஏம்மா, நீங்க டூர் போனீங்களா? பிகினி போட்டிக்கு போனீங்களா?' என்று ஒருவர் விமர்சித்துள்ளார். மற்றொருவர் 'இனி, இப்படி டிரெஸ் போட்டு போஸ் கொடுக்காதீங்க' என்று அன்பாக அட்வைஸ் செய்துள்ளார்.

வெட்கமே கிடையாதா
இன்னொரு ரசிகர், 'உங்களுக்கெல்லாம் வெட்கமே கிடையாதா? என்று பச்சையாகத் திட்டியுள்ளார். இதே போல இன்னும் சில ரசிகர்களும் அவரை கடுமையாகத் திட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











