ப்ப்பா...என்னா ஹாட்? பிகினியில எப்படியாவது அவங்களை முந்திருங்க... ஹீரோயினுக்கு ரசிகர்கள் அட்வைஸ்
மும்பை: எப்படியாவது, பிகினியில் பிரபல நடிகையை முந்திவிட வேண்டும் என்று இளம் ஹீரோயினுக்கு ரசிகர்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் மகள் சாரா அலிகான். இவரும் இப்போது ஹீரோயினாக நடித்துவருகிறார்.
2018ம் ஆண்டு வெளியான கேதார்நாத் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜோடியாக, அறிமுகமானார் சாரா. தொடர்ந்து ரன்வீர் சிங் ஜோடியாக சிம்பா படத்தில் நடித்தார். தற்போது இரண்டு படங்களில் நடித்துவருகிறார்.

அடிக்கடி பிகினி
பாலிவுட்டின் இளம் நடிகையான இவர் அடிக்கடி ஹாட் பிகினி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.

கேரளாவில்...
இந்நிலையில், கிறிஸ்துமஸை கேரளாவில் கொண்டாடிய அவர், புத்தாண்டை மாலத்தீவில் கொண்டாடி வருகிறார். அங்கு தனது சகோதரர் இப்ராஹிம் மற்றும் அம்மாவுடன் சென்றுள்ள அவர், நீச்சல் குளத்தில் இருக்கும் ஹாட் பிகினி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
நீச்சல் குளத்தில்
நீச்சல் குளத்தில் அவர் ஜாலியாக ஐஸ் கிரீம் தின்றபடி புன்னகைக்கும் பிகினி படத்தை நேற்று வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று ஹாட் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

திஷா படானி
பல ரசிகர்கள் இந்த போட்டோவை ரசித்து கமென்ட் போட்டு வருகின்றனர். அதில் ஒருவர், எப்படியாவது பிகினியில், நடிகை திஷா படானியை நீங்கள் முந்திவிட வேண்டும் என்று அட்வைஸ் செய்துள்ளார். மற்றொரு ரசிகர், அழகாக இருப்பதைத் தவிர உங்களுக்கு வேற என்ன வேலை இருக்கிறது? என்று வெறுப்பாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











