40 வயது நடிகருக்கு 20 வயது நடிகை ஜோடியா? பாலிவுட்டில் நடக்கும் அட்டகாசம்!
சென்னை: பேபி சாராவாக இருந்த பொன்னியின் செல்வன் பட நடிகை பாலிவுட்டில் கதாநாயகியாக களம் இறங்க உள்ளார். ரன்வீர் சிங், மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கன்னா ஆகியோர் நடித்துள்ளனர். ஆதித்யா தார் இயக்கி உள்ள இப்படத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தமிழ் சினிமா எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் இருந்தாலும், அவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைக்கும். அப்படி குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை அனிகா சுரேந்தர் தற்போது கதாநாயகியாக கலக்கி வருகிறார். அந்த வரிசையில் அப்போது பேபி சாராவும் இணைந்துள்ளார்.
க்யூட் பேபி: பேபி சாரா 2011 ஆம் ஆண்டு வெளியான தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக க்யூட்டான குழந்தையாக நடித்திருந்தார். அப்பா மகள் பாசத்தை சொல்லும் அந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சாரா நடித்தது அனைவராலும் பாராட்டப்பட்டது. சிறுவயதிலேயே தனது கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் பல்வேறு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார் சாரா.
தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு தமிழில் சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு, ஹலிதா சமீம் இயக்கிய சில்லுக்கருப்பட்டி போன்ற படத்தில் பேபி சாரா நடித்திருந்தார்.

பொன்னியின் செல்வன்: அதன், பிறகு மலையாளம், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வந்த பேபி சாரா. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரன் சிறுவயது நந்தினியாக அதாவது குட்டி நந்தினியாக நடித்து அசத்தி இருந்தார். அந்த கதாபாத்திரம் சில காட்சிகளில் மட்டுமே வந்து இருந்தாலும், சாராவின் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. அந்த படத்திலேயே ஒரு கதாநாயகிக்கான அனைத்து தகுதிகளும் சாராவிற்கு வந்துவிட்டது என படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள் அதன் பின் கொட்டேஷன் கேங் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் பல காட்சிகளில் பேபி சாராவா புகைப்பிடிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தைப் பார்த்த பலர் வியந்து போய் குட்டி பெண் சாராவா இது என்றனர். அந்த அளவிற்கு அந்த படத்தில் நடித்திருந்தார் சாரா. அந்த படத்தில், பிரியாமணி, ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், விவேக் கண்ணன் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பாலிவுட்டில் என்ட்ரி: 40 வயது ஹீரோவிற்கு ஜோடி: இத்தனை நாட்களாக பேபி சாராவா இருந்து வந்த சாரா தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நடிகை சாரா பாலிவுட்டில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ளார். 40 வயது நடிகரான ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக கமிட்டாகி உள்ளார். ஆதித்யா தார் இயக்கி உள்ள இந்த படத்தில், மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கன்னா ஆகியோர் நடித்துள்ளனர். ரன்வீர் சிங்கின் பிறந்த நாளை யொட்டி இன்று படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் சாரா, ரன்வீர் சிங்குடன் நெருக்கமாக இருக்கிறார். இதைப்பார்த்த இணையவாசிகள் 40 வயது நடிகருக்கு 20 வயது நடிகை ஜோடியா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











