»   »  மோகன்லால் ஜோடியாக சரண்யா!

மோகன்லால் ஜோடியாக சரண்யா!

Subscribe to Oneindia Tamil

பாக்யராஜின் மகள் சரண்யா மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஜோடியாகமலையாளப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு பூர்ணிமா பாக்யராஜ், பூர்ணிமா ஜெயராமாக இருந்தபோதுமோகன்லாலுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். இப்போது பூர்ணிமாவின்மகள் சரண்யா, மோகன்லாலுக்கு ஜோடி சேருகிறார்.

பாரிஜாதம் மூலம் தங்களது வாரிசு சரண்யாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்தியுள்ளபாக்யராஜ்-சரண்யா தம்பதி, சரண்யாவை பெரிய அளவில் ஹீரோயினாக மாற்ற தீவிரமுயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

பாரிஜாதத்தில் சரண்யாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால்,அடுத்தடுத்து நல்ல கேரக்டர்களில் நடித்து சரண்யாவின் மார்க்கெட்டை ஸ்திரப்படுத்தஅப்பா பாக்யராஜ் முடிவு செய்துள்ளார்.


ஆனால் பாரிஜாதத்திற்குப் பிறகு சரண்யாவுக்கு தமிழ்ப படங்கள் எதுவும்வரவில்லையாம். இதனால் சரண்யாவை வைத்து தானே இன்னொரு படத்தையும்இயக்க முடிவு செய்துள்ளாராம். இந்த நிலையில், மலையாளத்தில் சில வாய்ப்புகள்சரண்யாவைத் தேடி வந்துள்ளதாம்.

பூர்ணிமாவின் மகள் என்ற அந்தஸ்தும், பாரிஜாதம் கேரளாவிலும் நன்றாகஓடியதாலும் சரண்யாவுக்கு மலையாள இயக்குநர்களிடமிருந்து அழைப்புவந்துள்ளதாம். முதலில் மலையாளத்தில் நடிக்கலாமா, வேண்டாமா என்று வீட்டுக்குள்ஆலோசனை நடந்ததாம். இறுதியில் மலையாளத்திலும் நடிக்கலாம் என பூர்ணிமாபச்சைக் கொடி காட்டவே, பாக்யராஜ் அதை வழிமொழிந்தாராம்.

இப்படியாக மலையாளத்திலும் நடிக்க முடிவு செய்தார் சரண்யா. அவர் நடிக்கப்போகும் முதல் மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் ஜோடி சேருகிறார். இந்தப்படத்தின் பெயர் போட்டோகிராபர். ரஞ்சன் பிரமோத் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் முதலில் கன்னட நடிகையான நீத்தாஸ்ரீ தான் நடிப்பதாக இருந்தது.ஆனால் அதை விட்டு விட்டு சரண்யாவை ஹீரோயினாக்கியுள்ளனராம். விரைவில்இதுதொடர்பான அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிடவுள்ளனராம்.

பூர்ணிமா மலையாளத்தில் வெற்றி கொடி நாட்டியது போல சரண்யாவும்,மலையாளிகளின் நெஞ்சங்களை அள்ளுவார் என்று நம்புவோம்.

Read more about: saranya in malayalam films

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil