என்னது இந்த நடிகை கேங்ஸ்டரா நடிக்கறாங்களா... சூப்பர்தான் போங்க!

சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி அம்மா நடிகையாக இருப்பவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் ஏறக்குறைய அனைத்து நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரங்களும் இவரது ப்ளசாக உள்ளது. இந்நிலையில் இதுவரை பார்க்காத கேரக்டரில் இவரை தற்போது ரசிகர்கள் பார்க்க முடியும்.

அம்மா நடிகை

அம்மா நடிகை

நடிகை சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவின் சிறப்பான அம்மா நடிகையாக வலம் வருகிறார். சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்கு அம்மாவாக இவர் நடித்துள்ளார். சமீபத்தில் சூர்யாவிற்கு அம்மாவாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து சிறப்பான படங்களில் இவரை காண முடிகிறது.

கேங்ஸ்டர் வேடத்தில் சரண்யா

கேங்ஸ்டர் வேடத்தில் சரண்யா

இந்நிலையில் இவரது இந்த அம்மா பிம்பத்தை உடைக்கும் முயற்சியில் இவரை துணிச்சலான கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் விஷ்ணு ராமகிருஷ்ணன். அவர் இந்த திரைக்கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக இருப்பார் என்று தான் உணர்ந்ததாக அவர் கூறியுள்ளார்.

விஷ்ணு ராமகிருஷ்ணன் டைரக்ஷன்

விஷ்ணு ராமகிருஷ்ணன் டைரக்ஷன்

பிரபுதேவாவின் ஊமை விழிகள் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள இவர் தற்போது இயக்கத்தில் இறங்கியுள்ளார். முதலில் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்க சரண்யா பொன்வண்ணன் தயங்கியுள்ளார். ஆனால் விஷ்ணு ராமகிருஷ்ணன் கொடுத்த நம்பிக்கையில் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று தற்போது சிறப்பாக நடித்து வருகிறார்.

துப்பாக்கியை சிறப்பாக கையாண்ட சரண்யா

துப்பாக்கியை சிறப்பாக கையாண்ட சரண்யா

படத்தில் அவருக்கு சண்டைக்காட்சிகளும் உள்ளதாம். துப்பாக்கியை கையில் கொடுத்ததும் ஏற்கனவே சுட்டு பழகியவர் போல இயல்பாக நடித்து கொண்டுத்துள்ளார் சரண்யா. இந்தப் படத்தில் அவர் ரிடையர்ட் கேங்ஸ்டராக நடித்துள்ளார். படத்தில் சரண்யா தன்னுடைய நடிப்பால் கேரக்டரை மெருகேற்றியுள்ளதாகவும் விஷ்ணு குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

Semmalar Annam | SJ Surya Sir தான் என்னோட Inspiration | Filmibeat Tamil
பழைய கேங்ஸ்டர்

பழைய கேங்ஸ்டர்

குடும்பத்தினருடன் அமைதியாக வாழ்க்கை போகும்போது குடும்பத்திற்கு ஒரு பிரச்சினை வர, அதை தொடர்ந்து அவர் பழைய கேங்ஸ்டராக மாறி பிரச்சினையை தீர்க்கும் வகையில் கதைக்களம் அமைந்துள்ளது. சீரியசான படம் என்றாலும் சென்டிமெண்ட், நகைச்சுவையுடன் படம் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளதாகவும் விஷ்ணு குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X