»   »  ஹீரோயின் ஆனார் "காதல்" சரண்யா !

ஹீரோயின் ஆனார் "காதல்" சரண்யா !

Subscribe to Oneindia Tamil

காதல் படம் மூலம் சந்தியா மட்டும் பிரபலமாகவில்லை. அவருடன் "டூம்" கண்ணாடியை மாட்டிக் கொண்டு வந்த தோழிசரண்யாவும் இப்போது பிரபலமாகி விட்டார்.

முதலில் காதல் பட நாயகியாக இவரைத்தான் இயக்குநர்கள் ஷங்கரும், பாலாஜி சக்திவேலும் தேர்வு செய்து வைத்திருந்தார்கள்.ஆனால் எதேச்சையாக சந்தியாவின் புகைப்படத்தைப் பார்த்த அவர்கள், சந்தியாவைக் கூப்பிட்டு ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்து அவரைஹீரோயினாக செலக்ட் செய்து விட்டார்கள்.


இருந்தாலும் சரண்யாவுக்கு ஏமாற்றம் தரக் கூடாது என்பதற்காக சந்தியாவின் தோழியாக நடிக்க வைத்து விட்டார்கள். சந்தியாஅளவுக்கு சரண்யா பேசப்படவில்லை என்றாலும் கூட, மெக்கானிக் கடையில் சந்தியாவுடன் வந்து பரத்தையும், "சுள்ளான்"கரட்டாண்டியையும் சரண்யா மதுரை பாணியில் "லந்தடித்து" கலாய்த்தது, ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.

சந்தியாவை அடிக்கடி "புள்ள, புள்ள" என்று கூப்பிட்டு ரசிகர்களின் மனதை "ஃபுல்லாக" கவர்ந்தார். அதேபோல, சந்தியாவின்கையில்லாத சித்தப்பாவிடம், சந்தியாவும், பரத்தும் ஓடிப்போனதை போட்டுக் கொடுத்து ரசிகர்களிடம் வசவும் வாங்கினார்சரண்யா. இப்போது சரண்யாவும் ஹீரோயின் ஆகி விட்டார்.

அவர் ஹீரோயினாக நடிக்கப் போகும் படம் ஒரு வார்த்தை பேசு. அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவர் புதுமுகம் விமல்.கண்ணாடி இல்லாத சரண்யா கொஞ்சம் அழகாகத்தான் இருக்கிறார். காதல் பட நாயகி வாய்ப்பு கை நழுவிப் போனாலும், ஒருவார்த்தை பேசு மூலம் விட்டதைப் பிடிக்க முடிவு செய்திருக்கிறாராம் சரண்யா.

ஆல் தி பெஸ்ட் புள்ள!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil