»   »  திரைவானில் பறக்கத் தயார் - சரண்யா பாக்யராஜ் திரைவானில் பறக்கத் தயாராகி விட்டேன். விரைவில் பாரிஜாதம் மூலம் ரசிகர்கள் மனதில் குடியேறப் போகிறேன் என்று கூறியுள்ளார்இயக்குனர், நடிகர் பாக்யராஜின் மகள் சரண்யா.இந்தியாவிலேயே மிகச் சிறந்த திரைக் கதை ஆசிரியர் என முன்பு பேசப்பட்டவர் பாக்யராஜ். கோமாளித்தனமான காமடி பிளஸ் சென்டிமெண்ட்டைபோட்டுத் தாக்கி பல படங்களை எடுத்தவர் பாக்யராஜ்.வேட்டியை மடிச்சுக் கட்டு என்ற படத்துடன் இவரது சகாப்தம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. அந்தப் படம் தான் அவர் நாயகனாக நடித்து,இயக்கிய படம். எத்தனையோ வெள்ளி விழாப் படங்களைக் கொடுத்த பாக்யராஜ் தற்போது நடிப்பதில்லை. காரணம் வாய்ப்புகள் வரவில்லை.கடைசியாக விஜயகாந்தை வைத்து சொக்கத் தங்கம் என்ற படத்தை இயக்கினார். பரவாயில்லை ரகமாக இருந்தது சொக்கத் தங்கம். இப்போதுமகள் சரண்யாவை களம் இறக்கி விடுகிறார் பாக்யராஜ். பாரிஜாதம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள படத்தில் சரண்யா தான் நாயகி. இப்படத்தை பாக்யராஜே தயாரித்து இயக்குகிறார். அப்பாவின் படத்தின்மூலம் அறிமுகமாவது குறித்து பாரிஜாதம் என்ன சொல்கிறார்?நடிப்பது என்று நான் சின்ன வயசிலேயே முடிவு செய்து விட்டேன். அம்மாவிடம் சொன்ன போது அதற்கு அவர் தடை போடவில்லை. அப்பாவும் ஓ.கே.என்று தான் சொன்னார். ஆனால் அத்தோடு நில்லாமல் எனக்கு மேக்கப் டெஸ்ட் வைத்துப் பார்த்தார். அதில் நான் தேறியவுடன் டபுள் ஓ.கே.சொன்னார்.அம்மாவும், அப்பாவும் திரைத் துறையில் சாதனை படைத்தவர்கள். அம்மா சிறந்த நடிகை, அப்பா சிறந்த திரைக்கதை ஆசிரியர். அப்புறம் எனக்குஎன்ன பயம் இருக்கப் போகிறது. இருவரும் எனக்குத் துணையாக இருக்கப் போகிறார்கள். அப்பா, அம்மாவின் பெயரைக் கெடுக்காமல், அவர்களது கெளரவத்திற்கும்,மரியாதைக்கும் இழுக்கு ஏற்பட்டு விடாமல், சிறந்த நடிகையாக பெயர் பெறுவேன்.திரை வானில் பறக்கத் தயாராகி விட்டேன். ரசிகர்கள் மனதில் நிச்சயம் நான் இடம் பெறுவேன். விரைவில் பாரிஜாதம் வெளியாகும் என்கிறார்சரண்யா.சரண்யாவைப் போல அவரது தம்பி சாந்தனுவும் விரைவில் நடிப்பில் குதிக்கவுள்ளாராம். இதற்காக குதிரை சவாரி, டான்ஸ், சண்டை என சகலகலைகளையும் கற்றுத் தேர்ந்துள்ளாராம்.மகனும், மகளும் திரைத் துறையில் காலடி எடுத்து வைக்கும் நேரமோ என்னவோ, பாக்யராஜ் கையில் இப்போது சில படங்கள். எந்தப் படத்தையும்அவர் இயக்கவில்லை. அத்தனையிலும் நடிக்க மட்டுமே செய்கிறார். அதிலும் யாமிருக்கப் பயமேன் என்ற படத்தில் அவர் வக்கீலாக நடிக்கப் போகிறாராம்.ஸோ, மீண்டும் பாக்யராஜ்!

திரைவானில் பறக்கத் தயார் - சரண்யா பாக்யராஜ் திரைவானில் பறக்கத் தயாராகி விட்டேன். விரைவில் பாரிஜாதம் மூலம் ரசிகர்கள் மனதில் குடியேறப் போகிறேன் என்று கூறியுள்ளார்இயக்குனர், நடிகர் பாக்யராஜின் மகள் சரண்யா.இந்தியாவிலேயே மிகச் சிறந்த திரைக் கதை ஆசிரியர் என முன்பு பேசப்பட்டவர் பாக்யராஜ். கோமாளித்தனமான காமடி பிளஸ் சென்டிமெண்ட்டைபோட்டுத் தாக்கி பல படங்களை எடுத்தவர் பாக்யராஜ்.வேட்டியை மடிச்சுக் கட்டு என்ற படத்துடன் இவரது சகாப்தம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. அந்தப் படம் தான் அவர் நாயகனாக நடித்து,இயக்கிய படம். எத்தனையோ வெள்ளி விழாப் படங்களைக் கொடுத்த பாக்யராஜ் தற்போது நடிப்பதில்லை. காரணம் வாய்ப்புகள் வரவில்லை.கடைசியாக விஜயகாந்தை வைத்து சொக்கத் தங்கம் என்ற படத்தை இயக்கினார். பரவாயில்லை ரகமாக இருந்தது சொக்கத் தங்கம். இப்போதுமகள் சரண்யாவை களம் இறக்கி விடுகிறார் பாக்யராஜ். பாரிஜாதம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள படத்தில் சரண்யா தான் நாயகி. இப்படத்தை பாக்யராஜே தயாரித்து இயக்குகிறார். அப்பாவின் படத்தின்மூலம் அறிமுகமாவது குறித்து பாரிஜாதம் என்ன சொல்கிறார்?நடிப்பது என்று நான் சின்ன வயசிலேயே முடிவு செய்து விட்டேன். அம்மாவிடம் சொன்ன போது அதற்கு அவர் தடை போடவில்லை. அப்பாவும் ஓ.கே.என்று தான் சொன்னார். ஆனால் அத்தோடு நில்லாமல் எனக்கு மேக்கப் டெஸ்ட் வைத்துப் பார்த்தார். அதில் நான் தேறியவுடன் டபுள் ஓ.கே.சொன்னார்.அம்மாவும், அப்பாவும் திரைத் துறையில் சாதனை படைத்தவர்கள். அம்மா சிறந்த நடிகை, அப்பா சிறந்த திரைக்கதை ஆசிரியர். அப்புறம் எனக்குஎன்ன பயம் இருக்கப் போகிறது. இருவரும் எனக்குத் துணையாக இருக்கப் போகிறார்கள். அப்பா, அம்மாவின் பெயரைக் கெடுக்காமல், அவர்களது கெளரவத்திற்கும்,மரியாதைக்கும் இழுக்கு ஏற்பட்டு விடாமல், சிறந்த நடிகையாக பெயர் பெறுவேன்.திரை வானில் பறக்கத் தயாராகி விட்டேன். ரசிகர்கள் மனதில் நிச்சயம் நான் இடம் பெறுவேன். விரைவில் பாரிஜாதம் வெளியாகும் என்கிறார்சரண்யா.சரண்யாவைப் போல அவரது தம்பி சாந்தனுவும் விரைவில் நடிப்பில் குதிக்கவுள்ளாராம். இதற்காக குதிரை சவாரி, டான்ஸ், சண்டை என சகலகலைகளையும் கற்றுத் தேர்ந்துள்ளாராம்.மகனும், மகளும் திரைத் துறையில் காலடி எடுத்து வைக்கும் நேரமோ என்னவோ, பாக்யராஜ் கையில் இப்போது சில படங்கள். எந்தப் படத்தையும்அவர் இயக்கவில்லை. அத்தனையிலும் நடிக்க மட்டுமே செய்கிறார். அதிலும் யாமிருக்கப் பயமேன் என்ற படத்தில் அவர் வக்கீலாக நடிக்கப் போகிறாராம்.ஸோ, மீண்டும் பாக்யராஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரைவானில் பறக்கத் தயாராகி விட்டேன். விரைவில் பாரிஜாதம் மூலம் ரசிகர்கள் மனதில் குடியேறப் போகிறேன் என்று கூறியுள்ளார்இயக்குனர், நடிகர் பாக்யராஜின் மகள் சரண்யா.

இந்தியாவிலேயே மிகச் சிறந்த திரைக் கதை ஆசிரியர் என முன்பு பேசப்பட்டவர் பாக்யராஜ். கோமாளித்தனமான காமடி பிளஸ் சென்டிமெண்ட்டைபோட்டுத் தாக்கி பல படங்களை எடுத்தவர் பாக்யராஜ்.

வேட்டியை மடிச்சுக் கட்டு என்ற படத்துடன் இவரது சகாப்தம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. அந்தப் படம் தான் அவர் நாயகனாக நடித்து,இயக்கிய படம். எத்தனையோ வெள்ளி விழாப் படங்களைக் கொடுத்த பாக்யராஜ் தற்போது நடிப்பதில்லை. காரணம் வாய்ப்புகள் வரவில்லை.

கடைசியாக விஜயகாந்தை வைத்து சொக்கத் தங்கம் என்ற படத்தை இயக்கினார். பரவாயில்லை ரகமாக இருந்தது சொக்கத் தங்கம். இப்போதுமகள் சரண்யாவை களம் இறக்கி விடுகிறார் பாக்யராஜ்.

பாரிஜாதம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள படத்தில் சரண்யா தான் நாயகி. இப்படத்தை பாக்யராஜே தயாரித்து இயக்குகிறார். அப்பாவின் படத்தின்மூலம் அறிமுகமாவது குறித்து பாரிஜாதம் என்ன சொல்கிறார்?

நடிப்பது என்று நான் சின்ன வயசிலேயே முடிவு செய்து விட்டேன். அம்மாவிடம் சொன்ன போது அதற்கு அவர் தடை போடவில்லை. அப்பாவும் ஓ.கே.என்று தான் சொன்னார். ஆனால் அத்தோடு நில்லாமல் எனக்கு மேக்கப் டெஸ்ட் வைத்துப் பார்த்தார். அதில் நான் தேறியவுடன் டபுள் ஓ.கே.சொன்னார்.

அம்மாவும், அப்பாவும் திரைத் துறையில் சாதனை படைத்தவர்கள். அம்மா சிறந்த நடிகை, அப்பா சிறந்த திரைக்கதை ஆசிரியர். அப்புறம் எனக்குஎன்ன பயம் இருக்கப் போகிறது.

இருவரும் எனக்குத் துணையாக இருக்கப் போகிறார்கள். அப்பா, அம்மாவின் பெயரைக் கெடுக்காமல், அவர்களது கெளரவத்திற்கும்,மரியாதைக்கும் இழுக்கு ஏற்பட்டு விடாமல், சிறந்த நடிகையாக பெயர் பெறுவேன்.

திரை வானில் பறக்கத் தயாராகி விட்டேன். ரசிகர்கள் மனதில் நிச்சயம் நான் இடம் பெறுவேன். விரைவில் பாரிஜாதம் வெளியாகும் என்கிறார்சரண்யா.

சரண்யாவைப் போல அவரது தம்பி சாந்தனுவும் விரைவில் நடிப்பில் குதிக்கவுள்ளாராம். இதற்காக குதிரை சவாரி, டான்ஸ், சண்டை என சகலகலைகளையும் கற்றுத் தேர்ந்துள்ளாராம்.

மகனும், மகளும் திரைத் துறையில் காலடி எடுத்து வைக்கும் நேரமோ என்னவோ, பாக்யராஜ் கையில் இப்போது சில படங்கள். எந்தப் படத்தையும்அவர் இயக்கவில்லை. அத்தனையிலும் நடிக்க மட்டுமே செய்கிறார்.

அதிலும் யாமிருக்கப் பயமேன் என்ற படத்தில் அவர் வக்கீலாக நடிக்கப் போகிறாராம்.

ஸோ, மீண்டும் பாக்யராஜ்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil