»   »  சரண்யாவின் பாரிஜாதம் பாக்யராஜ் நீ...ண்ட வருடங்களுக்குப் பிறகு இயக்கும் பாரிஜாதம் படத்தில் அவரது மகள் சரண்யாவுக்கு ஜோடியாக கனாகண்டேன் வில்லன் பிருத்விராஜை களம் இறக்குகிறார்.மிகச்சிறந்த கதாசிரியர் என்ற பெயருடன் ஒரு காலத்தில் கோலிவுட்டை கலக்கி வந்த பாக்யராஜின் சகாப்தம் அவரது வேட்டியைமடிச்சுக் கட்டு படத்துடன் முடிவுக்கு வந்தது. அந்தப் படம் தான் அவர் கதாநாயகனாக நடித்து, இயக்கி வெளியான கடைசிப்படம்.அந்தப் படம் அடித்த அந்தர் பல்டியால் பாக்யராஜின் தமிழ்த் திரைவானில் திரை விழுந்தது. அதற்குப் பிறகு பத்திரிகைஆசிரியராக காலம் கடத்தி வந்தார். இதற்கிடைய சில காலம் முன்பு விஜயகாந்தை வைத்து சொக்கத் தங்கம் என்ற பெயரில் ஒருபடம் எடுத்தார்.இந்தப் படத்தின் மூலம் கோலிவுட்டில் மீண்டும் வலம் வரலாம் என்று கணக்கு போட்டார். ஆனால் அவரது திட்டம் தவிடுபொடியானது. இதனால் தனது பத்திரிகையிலேயே மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.இந் நிலையில் தான் அவரது மகள் சரண்யாவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆவல் ஏற்பட்டது. இதற்கு தடை ஏதும் சொல்லாமல்தன்னுடைய மகளை தானே அறிமுகம் செய்ய தீர்மானித்தார்.அந்த எண்ணத்தில் உருவானது தான் பாரிஜாதம். கதை, திரைக்கதை, நாயகி எல்லாம் ரெடி. ஆனால் ஹீரோவாக யாரைப்போடுவது என்பதில் தான் பாக்யராஜுக்கு கடும் குழப்பம். இப்போது தமிழில் முன்னணி நாயகர்களை ஏனோ பாக்யராஜுக்குப்பிடிக்கவில்லை.இதனால் புதுமுகங்களுக்கு வலைவீசத் தொடங்கினார். பாக்யராஜின் எண்ணத்திற்கேற்ற புதுமுகம் யாரும் சிக்கவில்லை. இந்த சமயத்தில் தான் கனா கண்டேன் படத்தில் ஜென்டில் வில்லனாக வந்து கலக்கிய மலையாள நடிகர் பிருத்விராஜின் ஞாபகம்வந்தது. உடனடியாக அவரிடம் பேசி ஒப்பந்தம் செய்து விட்டார். பிருத்விராஜைப் பற்றி சில குறிப்புகளைப் பார்ப்போமா... இவர் பழம்பெரும் மலையாள நடிகர் சுகுமாரனின் மகன்.மலையாளத்தில் தற்போது இவர் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார்.பிருத்விராஜும் நவ்யா நாயரும் சில படங்களில் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்தார்கள். இது போதாதா சினிமாக்காரர்களுக்கு,இரண்டு பேருக்கும் பத்திக்கிச்சு என்று பரபரப்பாக மலையாளப் படவுலகில் பேசிக்கொண்டார்கள்.இதற்கு அடுத்து மீரா ஜாஸ்மினுடன் 2 படங்களில் ஜோடி சேர்ந்தார். உடனே மீண்டும் கிளம்பி விட்டது மீரா ஜாஸ்மினுடன் சேர்த்துகிசுகிசு. இப்படி ஒரு ராசி பிருத்விராஜுக்கு உண்டு. இவரது அண்ணன் இந்திரஜித்தும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் சமீபத்தில் இணைந்து நடித்தபோலீஸ் என்ற படம் மலையாளத்தில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.பிருத்விராஜின் தாய் மல்லிகா முன்னாள் மலையாள நடிகை. இப்போது மலையாள டிவி சீரியல்களில் மாமியார் ரோல்களில்கலக்கி வருகிறார். பிருத்விராஜைப் பற்றிய தகவல்களை நிறுத்தி விட்டு மீண்டும் பாரிஜாதத்திற்கே வருவோம். பாரிஜாதம் என்ற பெயரை மறுபரிசீலனை செய்யலாமா என்று பாக்யராஜ் ஆலோசனை செய்து வருகிறாராம்.இதனால் அந்தப் பெயர் மாறினாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது கோலிவுட் பட்சி.பெயரை மாத்துங்க, ஆனால் கதாநாயகியை மாத்திடாதீங்க!

சரண்யாவின் பாரிஜாதம் பாக்யராஜ் நீ...ண்ட வருடங்களுக்குப் பிறகு இயக்கும் பாரிஜாதம் படத்தில் அவரது மகள் சரண்யாவுக்கு ஜோடியாக கனாகண்டேன் வில்லன் பிருத்விராஜை களம் இறக்குகிறார்.மிகச்சிறந்த கதாசிரியர் என்ற பெயருடன் ஒரு காலத்தில் கோலிவுட்டை கலக்கி வந்த பாக்யராஜின் சகாப்தம் அவரது வேட்டியைமடிச்சுக் கட்டு படத்துடன் முடிவுக்கு வந்தது. அந்தப் படம் தான் அவர் கதாநாயகனாக நடித்து, இயக்கி வெளியான கடைசிப்படம்.அந்தப் படம் அடித்த அந்தர் பல்டியால் பாக்யராஜின் தமிழ்த் திரைவானில் திரை விழுந்தது. அதற்குப் பிறகு பத்திரிகைஆசிரியராக காலம் கடத்தி வந்தார். இதற்கிடைய சில காலம் முன்பு விஜயகாந்தை வைத்து சொக்கத் தங்கம் என்ற பெயரில் ஒருபடம் எடுத்தார்.இந்தப் படத்தின் மூலம் கோலிவுட்டில் மீண்டும் வலம் வரலாம் என்று கணக்கு போட்டார். ஆனால் அவரது திட்டம் தவிடுபொடியானது. இதனால் தனது பத்திரிகையிலேயே மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.இந் நிலையில் தான் அவரது மகள் சரண்யாவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆவல் ஏற்பட்டது. இதற்கு தடை ஏதும் சொல்லாமல்தன்னுடைய மகளை தானே அறிமுகம் செய்ய தீர்மானித்தார்.அந்த எண்ணத்தில் உருவானது தான் பாரிஜாதம். கதை, திரைக்கதை, நாயகி எல்லாம் ரெடி. ஆனால் ஹீரோவாக யாரைப்போடுவது என்பதில் தான் பாக்யராஜுக்கு கடும் குழப்பம். இப்போது தமிழில் முன்னணி நாயகர்களை ஏனோ பாக்யராஜுக்குப்பிடிக்கவில்லை.இதனால் புதுமுகங்களுக்கு வலைவீசத் தொடங்கினார். பாக்யராஜின் எண்ணத்திற்கேற்ற புதுமுகம் யாரும் சிக்கவில்லை. இந்த சமயத்தில் தான் கனா கண்டேன் படத்தில் ஜென்டில் வில்லனாக வந்து கலக்கிய மலையாள நடிகர் பிருத்விராஜின் ஞாபகம்வந்தது. உடனடியாக அவரிடம் பேசி ஒப்பந்தம் செய்து விட்டார். பிருத்விராஜைப் பற்றி சில குறிப்புகளைப் பார்ப்போமா... இவர் பழம்பெரும் மலையாள நடிகர் சுகுமாரனின் மகன்.மலையாளத்தில் தற்போது இவர் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார்.பிருத்விராஜும் நவ்யா நாயரும் சில படங்களில் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்தார்கள். இது போதாதா சினிமாக்காரர்களுக்கு,இரண்டு பேருக்கும் பத்திக்கிச்சு என்று பரபரப்பாக மலையாளப் படவுலகில் பேசிக்கொண்டார்கள்.இதற்கு அடுத்து மீரா ஜாஸ்மினுடன் 2 படங்களில் ஜோடி சேர்ந்தார். உடனே மீண்டும் கிளம்பி விட்டது மீரா ஜாஸ்மினுடன் சேர்த்துகிசுகிசு. இப்படி ஒரு ராசி பிருத்விராஜுக்கு உண்டு. இவரது அண்ணன் இந்திரஜித்தும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் சமீபத்தில் இணைந்து நடித்தபோலீஸ் என்ற படம் மலையாளத்தில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.பிருத்விராஜின் தாய் மல்லிகா முன்னாள் மலையாள நடிகை. இப்போது மலையாள டிவி சீரியல்களில் மாமியார் ரோல்களில்கலக்கி வருகிறார். பிருத்விராஜைப் பற்றிய தகவல்களை நிறுத்தி விட்டு மீண்டும் பாரிஜாதத்திற்கே வருவோம். பாரிஜாதம் என்ற பெயரை மறுபரிசீலனை செய்யலாமா என்று பாக்யராஜ் ஆலோசனை செய்து வருகிறாராம்.இதனால் அந்தப் பெயர் மாறினாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது கோலிவுட் பட்சி.பெயரை மாத்துங்க, ஆனால் கதாநாயகியை மாத்திடாதீங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாக்யராஜ் நீ...ண்ட வருடங்களுக்குப் பிறகு இயக்கும் பாரிஜாதம் படத்தில் அவரது மகள் சரண்யாவுக்கு ஜோடியாக கனாகண்டேன் வில்லன் பிருத்விராஜை களம் இறக்குகிறார்.

மிகச்சிறந்த கதாசிரியர் என்ற பெயருடன் ஒரு காலத்தில் கோலிவுட்டை கலக்கி வந்த பாக்யராஜின் சகாப்தம் அவரது வேட்டியைமடிச்சுக் கட்டு படத்துடன் முடிவுக்கு வந்தது. அந்தப் படம் தான் அவர் கதாநாயகனாக நடித்து, இயக்கி வெளியான கடைசிப்படம்.

அந்தப் படம் அடித்த அந்தர் பல்டியால் பாக்யராஜின் தமிழ்த் திரைவானில் திரை விழுந்தது. அதற்குப் பிறகு பத்திரிகைஆசிரியராக காலம் கடத்தி வந்தார். இதற்கிடைய சில காலம் முன்பு விஜயகாந்தை வைத்து சொக்கத் தங்கம் என்ற பெயரில் ஒருபடம் எடுத்தார்.

இந்தப் படத்தின் மூலம் கோலிவுட்டில் மீண்டும் வலம் வரலாம் என்று கணக்கு போட்டார். ஆனால் அவரது திட்டம் தவிடுபொடியானது. இதனால் தனது பத்திரிகையிலேயே மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

இந் நிலையில் தான் அவரது மகள் சரண்யாவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆவல் ஏற்பட்டது. இதற்கு தடை ஏதும் சொல்லாமல்தன்னுடைய மகளை தானே அறிமுகம் செய்ய தீர்மானித்தார்.

அந்த எண்ணத்தில் உருவானது தான் பாரிஜாதம். கதை, திரைக்கதை, நாயகி எல்லாம் ரெடி. ஆனால் ஹீரோவாக யாரைப்போடுவது என்பதில் தான் பாக்யராஜுக்கு கடும் குழப்பம். இப்போது தமிழில் முன்னணி நாயகர்களை ஏனோ பாக்யராஜுக்குப்பிடிக்கவில்லை.

இதனால் புதுமுகங்களுக்கு வலைவீசத் தொடங்கினார். பாக்யராஜின் எண்ணத்திற்கேற்ற புதுமுகம் யாரும் சிக்கவில்லை.

இந்த சமயத்தில் தான் கனா கண்டேன் படத்தில் ஜென்டில் வில்லனாக வந்து கலக்கிய மலையாள நடிகர் பிருத்விராஜின் ஞாபகம்வந்தது. உடனடியாக அவரிடம் பேசி ஒப்பந்தம் செய்து விட்டார்.

பிருத்விராஜைப் பற்றி சில குறிப்புகளைப் பார்ப்போமா... இவர் பழம்பெரும் மலையாள நடிகர் சுகுமாரனின் மகன்.மலையாளத்தில் தற்போது இவர் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார்.


பிருத்விராஜும் நவ்யா நாயரும் சில படங்களில் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்தார்கள். இது போதாதா சினிமாக்காரர்களுக்கு,இரண்டு பேருக்கும் பத்திக்கிச்சு என்று பரபரப்பாக மலையாளப் படவுலகில் பேசிக்கொண்டார்கள்.

இதற்கு அடுத்து மீரா ஜாஸ்மினுடன் 2 படங்களில் ஜோடி சேர்ந்தார். உடனே மீண்டும் கிளம்பி விட்டது மீரா ஜாஸ்மினுடன் சேர்த்துகிசுகிசு. இப்படி ஒரு ராசி பிருத்விராஜுக்கு உண்டு.

இவரது அண்ணன் இந்திரஜித்தும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் சமீபத்தில் இணைந்து நடித்தபோலீஸ் என்ற படம் மலையாளத்தில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பிருத்விராஜின் தாய் மல்லிகா முன்னாள் மலையாள நடிகை. இப்போது மலையாள டிவி சீரியல்களில் மாமியார் ரோல்களில்கலக்கி வருகிறார்.

பிருத்விராஜைப் பற்றிய தகவல்களை நிறுத்தி விட்டு மீண்டும் பாரிஜாதத்திற்கே வருவோம். பாரிஜாதம் என்ற பெயரை மறுபரிசீலனை செய்யலாமா என்று பாக்யராஜ் ஆலோசனை செய்து வருகிறாராம்.

இதனால் அந்தப் பெயர் மாறினாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது கோலிவுட் பட்சி.

பெயரை மாத்துங்க, ஆனால் கதாநாயகியை மாத்திடாதீங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil