twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சரத்குமாரின் 'இன்னொரு மகளும்' ஹீரோயின் ஆனார்!

    By Sudha
    |

    சென்னை: சரத்குமார் நடித்த கம்பீரம் படத்தில் பேபி நடிகையாக நடித்தவரான மனீஷாஜித் இப்போது வளர்ந்து குமரியாகி நாயகியாகவும் மாறி விட்டார்.

    நண்பர்கள் கவனத்திற்கு

    நண்பர்கள் கவனத்திற்கு

    கே.ஜெயக்குமார் என்பவர் இயக்கும் படம்தான் நண்பர்கள் கவனத்திற்கு. இப்படத்தில் சஞ்சீவ் நாயகனாக நடிக்கிறார். மனீஷாஜித் நாயகியாக நடிக்கிறார். அதேபோல இன்னொரு நாயகனாக வர்ஷன் என்பவரும் தலை காட்டுகிறார்.

    கம்பீரம் குட்டிப் பாப்பா

    கம்பீரம் குட்டிப் பாப்பா

    கம்பீரம் படம் பார்த்திருப்பீர்கள். அதில் சரத்குமாரின் மகளாக ஒரு குட்டிப் பாப்பா நடிப்பிலும், பேச்சிலும் வெளுத்துக் கட்டியிருப்பார். அந்த பேபி நடிகைதான் இந்த மனீஷாஜித். குமரியான பின்னர் முதல் முறையாக ஹீரோயின் அவதாரம் எடுக்கிறார்.

    கவர்ச்சிக்கும் ஓ.கே.

    கவர்ச்சிக்கும் ஓ.கே.

    இப்படத்தில் நாயகியாக நடிக்கும் மனீஷாஜித் நடிப்போடு, கவர்ச்சியையும் சரிவிகித சமானத்தில் கலந்து தரத் தயாராக இருக்கிறாராம். அதேசமயம் முழுமையான கவர்ச்சிக்கு இவர் உடன்பட மாட்டாராம்.

    சரத்குமாரின் 2வது 'மகள்'

    சரத்குமாரின் 2வது 'மகள்'

    ஏற்கனவே சரத்குமாரின் ஒரிஜினல் மகள் வரலட்சுமி சிம்புவுடன் ஜோடி போட்டு ஹீரோயினாகி விட்டார். அடுத்து விஷாலுடன் ஜோடி சேரப் போகிறார். இந்த நிலையில், தற்போது சரத்குமாரின் மகளாக நடித்த மனீஷாஜித்தும் ஹீரோயினாகி விட்டார்.

    படத்தோட கதை இதுதானாம்

    படத்தோட கதை இதுதானாம்

    இந்தப் படம் நண்பர்கள் பற்றிய கதையாம். அதனால் ஏற்படும் உணர்வுப் போராட்டத்தைத்தான் படத்தில் சொல்லியுள்ளார்களாம்.

    English summary
    Manishajith has become a heroine through Nanbargal Gavanathirku. She has acted as the daughter of Sarath Kumar in his Gambeeram movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X