Saraswathi first look: வரலட்சுமியின் சரஸ்வதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
சென்னை: இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நடிகை வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற திரில்லர் படம் மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகை வரலட்சுமி தனது சகோதரி பூஜாவுடன் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சரஸ்வதி படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் குறித்து பேசி இருந்த வரலட்சுமி, கடந்த மூன்று ஆண்டுகளாகவே நான் ஒரு கதை குறித்து சிந்தித்து வந்தேன். அதில் சில மாற்றங்கள் செய்து, இப்போது அதை இயக்கி உள்ளேன். இயக்குநர் பாலா தான், என் முதல் குரு, நான் இயக்குநராவதற்காக அவர் நீண்ட காலமாகவே காத்திருந்தார். என் திருமணம் நடந்தபோது மகிழ்ச்சியடைந்ததை விட, இப்போது நான் இயக்க வருகிறேன் என்று சொன்னபோது பாலா சார் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இந்த ஸ்கிரிப்ட் பல வருடங்களாக என் மனதில் இருந்தது. இந்த கதை என்னைத் தவிர வேறு யாரும் சிறப்பாகச் செய்ய முடியாது என்று தோன்றியது. என் வாழ்க்கையில் நான் ஒரு இயக்குநராகவே இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இது இயற்கை எடுத்த முடிவு. நான் படங்களில் நடித்தாலும், படப்பிடிப்பின் போது, நான் இயக்குநருக்கு அருகிலேயே இருந்து உதவி செய்வேன். இதனால், என் சொந்தப் படப்பிடிப்பில் அது எனக்கு பெரும் உதவியாக இருந்தது என்றார்.

நடிகை வரலட்சுமி: இந்த படத்தில், பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி, நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் கையில் ஹேண்ட் பேக்கை வைத்துக்கு கொண்டு வேலைக்கு செல்வது போல போஸ் கொடுத்துள்ளார். இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இயக்குநர் அவதாரம்: நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே சொந்தக்குரலில் பேசி, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், சண்டைக்கோழி 2, இரவின் நிழல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் நடிகையாக இருந்தாலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











