முன்னாடியே தெரியும்.. வரலட்சுமி அதை சொன்னப்போ ஷாக் ஆகிட்டேன்.. சரத்குமாரின் முதல் மனைவி ஓபன் டாக்

சென்னை: சரத்குமார் முதலில் சாயா தேவி என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு தான் பிறந்தவர் வரலட்சுமி. பிறகு சாயாவை பிரிந்த சரத் அடுத்ததாக ராதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் தாய்லாந்தில் வைத்து நிக்கோலாய் என்பவரை வரலட்சுமி திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் அவர்களது திருமணம் குறித்து சாயா தேவி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு மனம் திறந்து பேட்டியளித்திருக்கிறார்.

கோலிவுட்டில் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் சரத்குமார். அவர் சாயா தேவி என்பவரை திருமணம் செய்தார். ஆனால் சில காரணங்களால் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அந்தத் திருமண வாழ்க்கையை அவர்கள் முறித்துக்கொண்டார்கள். அதனையடுத்து நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சரத்குமார். சரத் - சாயாவுக்கு பிறந்தவர்தான் வரலட்சுமி. அவரும் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

varalakshmi chaya devi sarathkumar

நல்ல நடிகை: விக்னேஷ் சிவன் இயக்குநராக அறிமுகமான போடா போடி திரைப்படத்தில்தான் வரலட்சுமியும் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் வரலட்சுமிக்கு நல்ல பெயரே கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் தாரை தப்பட்டை படத்தில் மிகச்சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் வரு. இருந்தாலும் தமிழில் அவர் எதிர்பார்த்தபடி வரிசையாக வாய்ப்புகள் வந்து குவியவில்லை. இருப்பினும் கிடைத்த வாய்ப்புகளில் தனது திறமையை பலமாகவே நிரூபித்தார்.

தெலுங்கு, கன்னடம்: தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் வரலட்சுமி.கடைசியாக அவர் கன்னடம், தமிழில் வெளியான மேக்ஸ் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக விஜய் சேதுபதி மகன் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் ஃபீனிக்ஸ் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விரைவில் அந்தப் படம் வெளியாகவிருக்கிறது. அதேபோல் 12 வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டது.

திருமணம்: அத்திரைப்படத்தில் வரலட்சுமி உச்சக்கட்ட கிளாமரில் நடித்திருந்தார். இதற்கிடையே அவருக்கும் விஷாலுக்கும் முதலில் காதல் இருந்தது என்றும்; பிறகு பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. சூழல் இப்படி இருக்க அவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்தார். அவர்களது காதலுக்கு வீட்டில் பச்சைக்கொடி காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாய்லாந்தில் வைத்து அவர்களது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. ரிசப்ஷன் சென்னையில் நடந்தது.

சாயா தேவி பேட்டி: இந்நிலையில் தனது மகள் தன்னிடம் வந்து காதல் கதையை சொன்னதை பகிர்ந்திருக்கிறார் சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவி. அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஒருநாள் வரலட்சுமி என்னிடம் வந்து அம்மா உங்களிடம் நான் ஒன்று சொல்ல வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் எனக்கான ஆணை கண்டுபிடித்துவிட்டேன் என்று கூறினார். அப்படி சொல்லும்போது எனக்கு கொஞ்சம் ஷாக்காகத்தான் இருந்தது. அதற்கு பிறகு உடனே நிக்கோலாய்க்கு வீடியோ கால் செய்து பேச வைத்தார். இவர்கள் காதலுக்கு முன்பே எனக்கு நிக்கோலாயை தெரியும். பார்த்திருக்கிறேன். நிக்கோலாய் - வரலட்சுமி காதல் எங்களுக்கெல்லாம் ஒரு சந்தோஷமான மொமண்ட்தான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X