விரட்டி அடிக்கப்பட்ட நயன்தாரா.. படப்பிடிப்புத் தளத்தில் கடுப்பான இயக்குநர்.. சம்பவத்தைச் சொன்ன நடிகர்
சென்னை: நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் மூத்த நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் உள்ளார். இவரது நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட மூன்று படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரத்தில் தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் எனக் கூறினார். இதற்கு விமர்சனங்களையும் சந்தித்தார். இப்போது அவர் குறித்து பரபரப்பான சம்பவத்தை மூத்த நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.
நயன்தாரா கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்குள் வந்தார். தனது சினிமா வாழ்க்கையில் நயன்தாரா சரிவைச் சந்தித்தது என்பது, அவரது சொந்த காரணங்களுக்காகத்தான். மற்றபடி நயன்தாரா தமிழ் சினிமாவில் தேர்வு செய்து நடித்த படங்கள் பெரும்பாலும் ஹிட் படங்கள், இல்லை என்றால் குறைந்த பட்சம் தோல்வியைத் தழுவிய படங்கள் எனலாம். இப்படியான நயன்தாரா தனது காதல்களால்தான் சினிமாவில் சரிவைச் சந்தித்தார் எனக் கூறலாம்.
அதாவது நயன்தாரா முதலில் நடிகர் சிம்புவுடன் காதலில் இருந்தார் என்ற தகவல்கள் வெளியானது. அதன் பின்னர் அவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது, எப்போது ஒன்றாக ஊர் சுற்றுவது என்பதையெல்லாம் வைத்து இருவரும் காதலில் உள்ளார்கள் எனக் கூறப்பட்டது. இவர்கள் இருவரது காதல் பிரிவில் முடிந்தது. அதன் பின்னர் நயன்தாரா பிரபுதேவாவைக் காதலித்தார். பிரபுதேவா ஏற்கனவே திருமணம் ஆனவர் எனத் தெரிந்தும், அவரைத் திருமணம் செய்துகொள்ளவும் முடிவெடுத்தார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் திருமணம் நின்றது. இந்த இரண்டு காதலர்களின் போது, நயன்தாராவின் சினிமா கெரியரில் கொஞ்சம் சறுக்கல் இருந்தது.

நயன்: பல தயாரிப்பாளர்கள் இவரை தங்களது படங்களில் புக் செய்ய யோசித்தார்கள். அந்த காலகட்டத்தில் பல நடிகைகள் தமிழ் சினிமாவில் கால் பதித்து, உச்சம் தொட்டு அதன் பின்னர் இப்போது காணாமல் போய்விட்டார்கள். அப்படி இருந்தும் நயன்தாரா இப்போதும் சினிமாவில் முதன்மையான கதாநாயகியாக உள்ளார். தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு, இரட்டை ஆண் குழந்தைகள் என மகிழ்ச்சியாக உள்ளார்.
பிரச்னை: நயன்தாரா தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அவரைச் சுற்றி பல்வேறு, பிரச்னைகள் ஓடிக்கொண்டு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், அவர் தன்னை தானே பிரச்னையில் சிக்க வைத்துக் கொண்டார் என்று கூறலாம். அதாவது தனது திருமண ஆவணப்படத்தை வெளியிட எடுத்த முடிவுகளால் தனுஷ்ஷின் பகையை வளர்த்து உள்ளார்கள். இவர்களது திருமண ஆவணப்படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த வீடியோக்களைப் பயன்படுத்தியதால், தனுஷ், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுத்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பியது. மேலும் தனுஷ்க்கு கடிதம் எழுதுகிறேன் என தனுஷ் குறித்து பல பரபரப்பான தகவல்களை தெரிவித்ததால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
அதிர்ச்சி: இந்த பிரச்னைக்கு பின்னர் நயன்தாரா சினிமா துறையில் செய்த பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை சினிமா வட்டாரத்தில் இருந்தவர்கள் பேசினார்கள். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இது ஒருபுறம் இருக்க நடிகை நயன்தாரா தனக்கு உள்ள அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தனுஷ்க்கு எவ்வளவோ அழுத்தம் எல்லாம் கொடுத்தார் என கூறப்படுகிறது.
.
லேடி சூப்பர் ஸ்டார்: மேலும், அனுஷ்கா நடிப்பில் அடுத்து தெலுங்கில் காத்தி என்கிற ஒரு படம் ரிலீஸ் ஆகவுள்ளது. அந்த படத்தின் டைட்டில் கார்டில் அனுஷ்காவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என குறிப்பிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட நயன்தாரா, மற்றும் விக்னேஷ் சிவன், இது தொடர்பாக காத்தி படக்குழுவினரிடம் பேசி, லேடி சூப்பர் ஸ்டார் என போடக்கூடாது எனக் கூறியுள்ளார்கள். அதற்கு காத்தி படக்குழுவினர், நீங்கள் தமிழுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்றால், அனுஷ்கா தெலுங்கில் லேடி சூப்பர் ஸ்டார். நாங்கள் அனுஷ்காவுக்க்கு கட்டாயம் லேடி சூப்பர் ஸ்டார் என போடுவோம் எனக் கூறியுள்ளார்கள்.
காரணம்: அதற்கு நயன்தாரா தரப்பில் எப்படியும் காத்தி படத்தை தமிழில் டப்பிங் செய்யத்தானே போகிறீர்கள் என்றெல்லாம் கேட்டுள்ளார்கள். ஆனாலும், காத்தி படக்குழுவினர் , தமிழில் கட்டாயம் டப்பிங் செய்வோம். ஆனால் சூப்பர் ஸ்டார் என போடப் போவது உறுதி எனத் தெரிவித்துள்ளார்கள். இந்த பிரச்னையில் தன்க்கு சாதகமான முடிவு கிடைக்காததால், நயன்தாரா தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இது வெறுமனே கவன ஈர்ப்புக்காக மட்டும்தான்" என செய்யாறு பாலு ஒரு வீடியோவில் பேசியிருந்தார்.
சரத்குமார்: மேலும் அவர் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். அவர் தயாரிப்பில் படங்களும் வெளிவந்து கொண்டு உள்ளது. இது மட்டும் இல்லாமல் நயன்தாரா பல தொழில்களையும் செய்து வருகிறார். நயன்தாரா தற்போது பல படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்த ஆண்டில் அவரது நடிப்பில் மூன்று படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது என கூறப்படுகிறது. இப்படியான நிலையில் இவரது முதல் படமான, அதாவது தமிழில் முதல் படமான ஐயா படத்தின் நாயகன் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் கூறியுள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஐயா: இது தொடர்பாக அவர் பேசும்போது, அதாவது, ஐயா படத்தின் முதல் நாள் சூட்டிங்கிற்கு நயன்தாரா வந்தார். நயன்தாரா அப்போது மாடர்ன் டிரஸ் போட்டுக்கொண்டு வந்தார். அவரைப் பார்த்ததும் இயக்குநர் ஹரிக்கு கோபம் வந்துவிட்டது. இந்த பொண்ணு என்ன மார்டன் டிரஸில் வந்துள்ளார். நம்ம கதைக்கு பொருந்தாது போலையே என நினைத்து விட்டார். நயன்தாரா உடனே செட்டில் இருந்து கூட்டிட்டு போங்கையா எனத் துரத்திவிட்டார். மேலும் மாலை நயன்தாராவுக்கு காஸ்ட்யூம் கொடுக்க வைத்து அதன் பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு ஹரி வந்துவிட்டார்" எனக் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

குடும்பம்: நயன்தாரா குறித்து பலரும் பலவிதமான சர்ச்சைக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தாலும், அவருக்கு ரசிகர்கள் கொடுக்கும் அன்பு கொஞ்சமும் குறையவில்லை. நயன் - விக்கி தம்பதியருக்கு மட்டும் இல்லாமல் அவரது குழந்தைகளான உயிர் மற்றும் உலக் குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதாவது புகைப்படங்களைப் பகிர்ந்தால், ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்களையும் வாரி வழங்கி வருகிறார்கள். விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்சுரன்ஸ் கம்பனி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரதீப் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











