மகிழ்ச்சியான பிறந்த நாள் இது.. அன்பு மகள் வரலட்சுமிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன சரத்குமார்!

சென்னை: தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருக்கும் அவரின் முதல் மனைவி சாயா தேவிக்கும் பிறந்த மூத்த மகள் வரலட்சுமியும் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். வரலட்சுமி சரத்குமாரின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சரத்குமார் தனது மகளுக்கு க்யூட்டாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சினிமா மீது இருந்த ஆர்வத்தால், மும்பைக்கு சென்று அனுபம் கெரின் ஆக்ட்டிங் ஸ்கூலில் பயிற்சி பெற்று தன்னுடைய நடிப்பு திறனை மென்மேலும் மெருகேற்றிக் கொண்டார் வரலட்சுமி. இதையடுத்து இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சரத்குமார் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அந்த வாய்ப்பை நிராகரித்தார் வரலட்சுமி. அது போலவே காதல், சரோஜா உள்ளிட்ட படங்களின் வாய்ப்பையும் தவறவிட்டார்.

Sarathkumar wished actress Varalakshmi Sarathkumar on her birthday

நடிகை வரலட்சுமி சரத்குமார்: இதையடுத்து, விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தின் மூலம் சிம்புக்கு ஜோடியாக அந்த படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், இரவின் நிழல் உள்ளிட்ட எக்கச்சக்க திரைப்படங்களில் நடித்துள்ள வரலட்சுமி, தமிழ் மொழியை தாண்டி, மலையாளம் , தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நிறைய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் வரலட்சுமி.

வில்லியாக: கதையின் நாயகியாகவும் நடிக்கும் வரலட்சுமி சரத்குமார், சர்க்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லி ஆகவும் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தையும் தென் இந்திய சினிமாவில் பிடித்துள்ளார். அண்மையில், இவர் நடிப்பில், வீர சிம்ஹா ரெட்டி, மைக்கேல், ஹனுமான் உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

நிச்சயதார்த்தம்: படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை வரலட்சுமிக்கும் மார்ச் 1ந் தேதி மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்வுடன் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பெற்றோர் முன்னிலையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். இதில் தொழிலதிபரான நிகோலய் சச்தேவுக்கு ஏற்கனவே திருமணமாகி 15வயதில் பெண் இருக்கும் நிலையில், வரலட்சுமி சரத்குமார் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

சரத்குமார் வாழ்த்து: இந்நிலையில்,இன்று 39வது பிறந்த நாளை கொண்டாடும் வரலட்சுமி சரத்குமாருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனது மகளின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சரத்குமார், வரலட்சுமின் சிறுவயது போட்டோவை ஷேர் செய்து, என் அன்பான வாரு, இந்த பிறந்த நாள் உன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான பிறந்தநாள். உன் வாழ்க்கையின் மகிழ்ச்சியான பயணத்தில் உன்னை அழைத்துச் செல்கிறது. உனக்கு அன்பும் பாசமும் நிறைந்த உனக்கான ஒரு துணையாக கண்டுபிடித்தாய். தெய்வீக சக்தியுடன் நீங்கள் இருவரையும் நீண்ட நாள் அன்பான வாழ வேண்டும் என்று சரத்குமார் தனது மகளுக்கு அழகாக பிறந்த நாள் வாழ்த்து சொல்லி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X