ஒரு கயிறு அங்கே.. ஒரு கயிறு இங்கே.. ஜன்னல் வைத்த உடையில் அசத்தும்.. சர்தார் 2 பட நடிகை!
சென்னை: தென்னிந்திய சினிமாவில் தனது அழகாலும், அசத்தலான நடிப்பாலும் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் நடிகை ஆஷிகா ரங்கநாத். கன்னட சினிமாவைத் தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடமும் அவர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். சில வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் அவரது புகழ் மேலும் உயர்ந்துள்ளது. தற்போது அவர் பகிர்ந்து இருக்கும் கவர்ச்சி போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நடிகை ஆஷிகா ரங்கநாத் கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகுரு மாவட்டத்தில் 1996ம் ஆண்டு ஆகஸ்ட் 5ந் தேதி பிறந்தார். இவர் கன்னட திரைப்படமான கிரேஸி பாய் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மதகஜா,O2 ஆகிய படங்களில் ஆஷிகா நடித்துள்ளார். தமிழில் பட்டத்து இளவரசன், மிஸ் யூ போன்ற படத்தில் நடித்துள்ள இவர், பி எஸ் மித்ரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் சர்தார் 2 படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் விரைவில் இப்படத்தின் டீசல் வெளியாக உள்ளது.

ஆஷிகா ரங்கநாத் : இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஆஷிகா ரங்கநாத், தனது தனிப்பட்ட வாழ்க்கை, மகிழ்ச்சி, கவலை என எல்லா தருணங்களையும் புகைப்படமாக அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தற்போது இவர், வெள்ளை மற்றும் கோல்டன் நிற உடையில் கவர்ச்சியாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த போட்டோவை அவர் வெளியிட்ட சில நொடியில் அந்த பதிவுகள் ஆயிரக்கணக்கான லைக்குகளையும், பாராட்டுக் கருத்துகளையும் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. போட்டோவை பார்த்த ரசிகர்கள் "கிளாமர் குயின்", "ஸ்டைல் ஐகான்", "சிம்பிள் ஆனா ஸ்மார்ட் லுக்" என்று கருத்துக்கள் பதிவு செய்து வருகின்றனர். புதிய பட வாய்ப்புகளிலும், பிராண்டு ஒப்பந்தங்களிலும் பிஸியாக இருக்கும் ஆஷிகா ரங்கநாத், தற்போது ''கதாவைபவம்'' படத்தில் நடித்து வருகிறார். துஷ்யந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை சுனி இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற 14 -ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











