சோலார் பேனல் ஊழல் பற்றி படுமெடுத்த தயாரிப்பாளர் வீட்டுக்குப் போய் மிரட்டிய சரிதா நாயர்!
திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த சோலார் பேனல் ஊழலை மையமாக வைத்து உருவாகும் மலையாளப் படத்தின் தயாரிப்பாளரை, இந்த ஊழலில் முக்கிய புள்ளியான சரிதா நாயர் மற்றும் சிலர் வீடு தேடிப் போய் மிரட்டியுள்ளனர்.
கேரளாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது சோலார் பேனல் ஊழல். இதில் சரிதா நாயர் என்ற பெண் உள்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சிக்கியுள்ளனர். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தை மையமாக வைத்து சோலார் ஸ்வப்னம் என்ற பெயரில் மலையாளத்தில் ஒரு படம் தயாராகிறது.
ஜாய் ஆண்டனி இயக்கி இருக்கியுள்ள இந்தப் படத்தில் வருவது, முழுக்க முழுக்க உண்மை சம்பவங்கள்தான். இது சரிதா நாயரை கோபப்படுத்தியுள்ளது.
அவர் தனது அடியாட்களுடன் படத்தின் தயாரிப்பாளர் வீட்டுக்கே போய் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுபற்றி பட தயாரிப்பாளர் ராஜு ஜோசப் கூறும்போது, "படத்தில் சரிதா நாயர் கேரக்டர் உள்ளது. அந்த வேடத்தில் நடித்திருப்பவர் பூஜா.
இதுபற்றி அறிந்த சரிதா நாயர் திடீரென்று என்னுடைய வீட்டுக்கு சிலருடன் வந்தார். அப்போது வீட்டில் நான் இல்லை. 85 வயதான எனது தாயார் மட்டும் இருந்தார். அவரிடம் படத்தை வெளியிட்டால் நடப்பதே வேறு என்று மிரட்டிவிட்டு சென்றார்," என்றார்.
ஆனால் போலீசில் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. இப்படத்தில் ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications