Vijay: விஜய்யுடன் மீண்டும் இணையும் மிரட்டல் வில்லி.. தளபதி 69 படத்தில் இணைந்த நடிகை!
சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் 2வது கட்ட சூட்டிங் தற்போது சென்னையில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. சென்னையின் ஆபிசர் அகாடமி உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வரும் இந்த ஷூட்டிங்கில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் பங்கேற்று வருகின்றனர். படத்தின் வில்லனான பாபி தியோலும் விரைவில் தளபதி 69 படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த படத்தில் சர்க்கார் படத்தில் விஜய்யுடன் இணைந்து மிரட்டிய நடிகையும் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இந்தப்படத்திலும் அவர் மீண்டும் வில்லியாக நடிப்பாரா அல்லது கேரக்டர் ரோலில் இணைவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் இறுதிப்படமாக உருவாகிவரும் தளபதி 69 படத்தின் 2வது கட்ட சூட்டிங் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 5ம் தேதி இந்த படத்தின் பூஜை சென்னையில் பிரமாண்டமாக போடப்பட்டு அடுத்த நாளிலேயே சென்னையில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்டது. தொடர்ந்து சில தினங்கள் இந்த படத்தின் பாடல் காட்சியின் சூட்டிங்கை படத்தின் இயக்குநர் ஹெச் வினோத் எடுத்து முடித்திருந்தார். தொடர்ந்து தன்னுடைய அரசியல் கட்சியின் முதல் மாநாட்டை கடந்த மாதம் நடத்தி முடித்து முடித்துள்ளார் விஜய். இதனிடையே மீண்டும் தளபதி 69 படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் இம்மாத துவக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது.
தளபதி 69 பட சூட்டிங்: சென்னை ஆபீசர்ஸ் அகாடமியில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்த நிலையில் மீண்டும் படத்தின் பாடல் காட்சியின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. தொடர்ந்து ஆக்ஷன் காட்சிகளும் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் காம்பினேஷன் காட்சிகளும் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது தன்னை பார்க்க வந்த ரசிகர்களை ஷூட்டிங்கை முடித்துவிட்டு விஜய் பார்த்ததையும் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ மூலம் அனைவரும் அறிந்து கொள்ள முடிந்தது.
விஜய்யுடன் இணைந்த வரலட்சுமி: இந்நிலையில் இந்த படத்தில் புதிய இணைப்பாக நடிகை வரலட்சுமி சரத்குமார் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக விஜய்யுடன் சர்க்கார் படத்தில் வரலட்சுமி சரத்குமார் இணைந்து மிரட்டலான நடிப்பை கொடுத்திருந்தார். இந்த படத்தில் அவர் வில்லியாக நடித்திருந்த நிலையில் தனது வில்லத்தனத்தால் விஜய்க்கு சரியான டஃப் கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் விஜய்யுடன் தளபதி 69 படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவரது கேரக்டர் குறித்த தகவல்கள் தெரியவில்லை. படத்தில் அவர் வில்லியாக இணைகிறாரா என்பது குறித்தும் படத்தில் அவர் இணையவுள்ளது குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரலட்சுமி -நிக்கோலாய் திருமணம்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தன்னுடைய நீண்ட நாள் காதலரான நிக்கோலாய் சச்தேவை மிகவும் பிரம்மாண்டமான முறையில் வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்து கொண்டார். அடுத்தடுத்து தன்னுடைய திருமணம், தலை தீபாவளி கொண்டாட்டம் என வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் விஜய்யுடன் அவரது கடைசி படத்தில் இணையவுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











