வரலட்சுமிக்கு 'மாரி 2' படத்திலும் தொடரும் சர்கார், சண்டக்கோழி 2 ராசி

By Siva

Recommended Video

வரலட்சுமிக்கு மாரி 2 படத்திலும் தொடரும் அந்த ராசி- வீடியோ

சென்னை: வரலட்சுமி சரத்குமாருக்கு சர்கார், சண்டக்கோழி 2 பட ராசி மாரி 2 படத்திலும் தொடர்கிறது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாரி 2 படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரின் கெட்டப்பை பார்த்தால் சர்கார் பாப்பா நினைவுக்கு வருகிறது.

நிச்சயம் இந்த படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்நிலையில் இன்று நடந்த மாரி 2 படக்குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பில் வரலட்சுமி கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது,

தனுஷ்

தனுஷ்

தனுஷ் சாருடன் சேர்ந்து நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. ஒரு நடிகராக அவரை பார்த்து வியப்பவள் நான். படப்பிடிப்பின்போது ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம். ஆக்ஷன் என்று கூறியதும் பொதுக்கென்று அழ ஆரம்பித்துவிட்டார். அவர் நடிப்பை பார்த்து வியந்தேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

பார்ட் 2

பார்ட் 2

இந்த ஆண்டு ரொம்ப நல்ல ஆண்டு. பார்ட் 2 படங்களில் எல்லாம் நான் இருக்கிறேன். இது ரொம்ப முக்கியமான கதாபாத்திரம். நீங்கள் தான் பண்ண வேண்டும் என்று இயக்குனர் பாலாஜி என்னிடம் கூறினார். ஸ்க்ரிப்ட்டை கேட்டதுமே பிடித்துவிட்டது. அப்பொழுது டேட்ஸ் கொஞ்சம் பிரச்சனையாக இருந்தது. ஒரு நாளில் 7 சேலை மாற்றி நடித்துக் கொடுத்துவிட்டேன்.

யுவன்

யுவன்

இது ரொம்ப ஜாலியான படம். இந்த படத்தில் நிறைய நண்பர்களுடன் சேர்ந்து வேலை பார்த்தேன். காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி என் நெருங்கிய தோழி. அவர் தான் இந்த படத்தில் என் உடைகளை கவனித்துக் கொண்டார். யுவனுடன் இரண்டாவது படம். சண்டக்கோழி 2 படத்தில் எனக்கு ஒரு செக்சியான பிஜிஎம் போட்டார். இதிலும் அவர் அருமையாக வேலை செய்துள்ளார்.

சாய் பல்லவி

சாய் பல்லவி

வழக்கம் போல இந்த படத்திலும் எனக்கு ஹீரோயினுடன் காம்பிஷேன் இல்லை. கிருஷ்ணாவுக்கும், எனக்கும் காம்பினேஷன் இல்லை. இருந்தாலும் அவர் என் மயிலே, குயிலே. அவர் இந்த படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி என்றார் வரலட்சுமி சரத்குமார். சர்கார் படத்தில் ஹீரோயின் கீர்த்திக்கும், வில்ல வரலட்சுமிக்கும் காம்பினேஷன் காட்சி இல்லை. சண்டக்கோழி 2 படத்திலும் கீர்த்தி, வரலட்சுமிக்கு காம்பினேஷன் இல்லை. இந்நிலையில் மாரி 2 படத்திலும் அந்த சென்டிமென்ட் தொடர்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X