இளம் வயதிலேயே கணவர் மரணம்.. தத்தெடுத்த மகளும் மறைவு.. சரோஜா தேவி வாழ்க்கையில் இத்தனை சோகங்களா?

சென்னை: பழம்பெரும் நடிகை சரோஜாதேவி 87 வயதில் இயற்கை எய்தியது சினிமா உலகையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூரில் உள்ள மல்லேஸ்வரத்தில் சரோஜா தேவியின் இல்லத்தில் அவரது திருவுடல் அஞ்சலிக்காக நாளை வரை வைக்கப்படுகிறது. நாளை மதியம் 12 மணிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரில் சுமார் 500 கோடி சொத்துக்கள் சரோஜா தேவி பெயரில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 1986ம் ஆண்டு அவரது கணவர் ஹர்ஷா மறைந்த பின்னர் மறுமணம் ஏதும் செய்துக் கொள்ளாமல் தனது வளர்ப்பு மகளுடனும் அவரது குழந்தைகளுடனும் வாழ்ந்து வந்தார்.

Saroja Devi husband and adopted daughter all died earlier affect her more
Photo Credit:

வளர்ப்பு மகள் புவனேஸ்வரியும் இளம் வயதிலேயே உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழக்க ஒட்டுமொத்தமாகவே உடைந்து போய்விட்டார் சரோஜா தேவி. இன்றைய காலத்தில் ஹீரோக்கள் 60 படங்களில் நடிக்கவே திக்குமுக்காடுகின்றனர். அன்றைய காலக்கட்டத்தில் 4 மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சரோஜா தேவி வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்கள் குறித்து இங்கே காணலாம்.

மறுமணம் செய்ய விருப்பமில்லை: பெங்களூருவை சேர்ந்த போலீஸ்காரரின் மகள் தான் சரோஜா தேவி. 17 வயதில் கன்னட படமான மகாகவி காளிதாஸ் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அவர், தமிழில் திருமணம் படத்தின் மூலம் அறிமுகமானார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ஆர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான சரோஜா தேவி, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிய ஸ்ரீ ஹர்ஷாவை 1967-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அவருடைய திரை வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும், குறிப்பாக பொருளாதார ரீதியிலான நெருக்கடிகள் ஏற்பட்ட சமயங்களில் ஸ்ரீ ஹர்ஷா உறுதுணையாக இருந்தார். 1986-ஆம் ஆண்டு அவர் மரணமடைந்த பிறகு, சரோஜாதேவி சிறிது காலம் நடிப்புத் தொழிலில் இருந்து விலகி இருந்தார். ஆனால், மறுமணம் செய்யாமலே கடைசி வரை வாழ்ந்தார். மறுமணம் செய்யாதது ஏன்? என்கிற கேள்விக்கு பேட்டி ஒன்றில் ஹர்ஷா ரொம்பவே கனிவானவர். அந்த காலத்திலேயே திருமணத்துக்குப் பிறகும் தன்னை நடிக்க அனுமதித்த மனிதர். அவருடைய நினைவுகளிலேயே வாழ முடிவெடுத்த நிலையில், மறுமணம் செய்துக் கொள்ளவில்லை என்றார்.

தத்தெடுத்த மகளும் மரணம்: பின்னர் குணச்சித்திர வேடங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். அவர் புவனேஷ்வரி என்ற ஒரு மகளைத் தத்தெடுத்து வளர்த்தார். புவனேஸ்வரி சரோஜா தேவியின் உறவினரின் மகள் தானாம். அவருக்கு கெளதம் ராமசந்திரன், இந்திராகாந்தி என இரண்டு பேரக்குழந்தைகளும் உள்ளனர். சரோஜாதேவி தனது மகள் இறந்த பிறகு, புவனேஷ்வரி பெயரில் இலக்கியத்துக்கான விருதை வழங்கி வந்தார். சரோஜாதேவியின் இறுதிச் சடங்குகள் பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன. திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய வாழ்க்கை, கலைத் திறமைக்கும், மனித நேய அர்ப்பணிப்புக்கும் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டன.

கடைசி வரை எம்ஜிஆரை தனது தொழில் தெய்வமாகவே நினைத்து அவர் பேசியது எல்லாம் மறக்கவே முடியாத ஒன்றாகும். அவருக்குப் பிறகு அவர் குடும்பத்தினர் யாருமே சினிமாவில் நடிக்க ஆர்வமே செலுத்தவில்லை. அவரது சகோதரிகளும் அவருக்கு முன்னதாக காலமானது அவரை மிகவும் வாட்டி எடுத்தது. அன்பு செலுத்தும் நபர்கள் எல்லாம் நம்மை விட்டுப் போய்விடுகிறார்களே என கடைசி வரை தீரா சோகத்திலேயே வாழ்ந்ததாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X