பிரபல நடிகருடன் காதலில் விழுந்துவிட்டாரா சார்பட்டா பரம்பரை நாயகி?.. இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் கேள்வி
சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் பிரபல நடிகருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்ததை அடுத்து அவர் காதலில் விழுந்துவிட்டாரா என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர் பா.இரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் அறிமுகமனாவர் துஷாரா விஜயன். திண்டுக்கல்லை பூர்வீகமாக கொண்ட துஷாராவின் நடிப்பு முதல் படத்திலேயே அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்தப் படத்தில் ஆர்யா, பசுபதி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டானது.

விமர்சனங்களை சந்தித்த ரெனே
சார்பட்டா பரம்பரை படத்துக்கு பிறகு பா. இரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்தார் துஷாரா விஜயன். அந்தப் படத்தில் ரெனே என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். வெறும் முகநூல் பதிவுகளை பார்த்து இரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது படத்தை எடுத்துவிட்டார் என விமர்சனங்கள் எழுந்தன. படம் மட்டுமின்றி துஷாரா ஏற்றிருந்த ரெனே கதாபாத்திரத்தையும் பலரும் காத்திரமாகவே விமர்சனம் செய்தனர். இருப்பினும் படத்தில் துஷாரா விஜயன் நடிப்பு பிரமிக்கும் வகையில் இருந்தது.

வசந்தபாலனின் படத்தில் துஷாரா விஜயன்
முதல் இரண்டு படங்களிலும் நடிப்பு மூலம் கவனம் ஈர்த்த துஷாரா விஜயன் தற்போது வசந்தபாலனின் இயக்கத்தில் அநீதி என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மறைந்த பாடலாசிரியரின் கவிதைகளை தொகுத்து ஒரு பாடலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

பிரபல நடிகருடன் காதலில் விழுந்துவிட்டாரா துஷாரா விஜயன்?
இந்நிலையில் துஷாரா விஜயன் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அந்த ஸ்டோரியில் அவர் நடிகர் ஹரியுடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. மேலும் அதற்கான கேப்ஷனில், "என்னுடைய ஹரி" என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ஹரியுடன் துஷாரா விஜயன் காதலில் விழுந்துவிட்டாரா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.

இரஞ்சித்தின் படங்களில் கவனம் ஈர்த்த ஹரி
ஹரியும் பிரபல நடிகர் ஆவார். இரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரும் ஹிட்டடித்த மெட்ராஸ் படத்தில் ஹரி ஏற்றிருந்த ஜானி கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் ரைட்டர் படத்திலும் தனது நடிப்பு மூலம் கவனம் ஈர்த்த ஹரி நட்சட்திரம் நகர்கிறது படத்திலும் நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் நடித்தபோதுதான் அவருக்கும், துஷாராவுக்கும் காதல் மலர்ந்திருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் பேச்சு எழுந்திருக்கிறது. அதேசமயம், என் ஹரி என்று ஒரு பெண் பதிவிட்டால் அது காதலாகத்தான் இருக்க வேண்டுமா? நட்பாக இருக்கக்கூடாதா எனவும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











