நடு காட்டில் தனிமை வந்ததே... சார்பட்டா பரம்பரை நடிகையின் அசத்தல் புகைப்படங்கள்!

சென்னை: பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி பட்டையை கிளப்பிய சார்பட்டா பரம்பரை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை துஷாரா விஜயன்.

இப்போது மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் நட்சத்திரம் நகர்கிறது என்ற காதல் படத்தில் நடித்து வருகிறார்

நாடு காட்டில் துஷாரா விஜயன் எடுத்த அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இப்பொழுது இணையதளத்தில் வைரலாகிறது.

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் பா ரஞ்சித் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் புரட்சிகரமாக இருக்கும். இதுவரை வடசென்னையை பற்றி பல படங்களில் காட்டிய பலவற்றையும் இவர் தன்னுடைய படங்களின் மூலம் மாற்றி வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படமும் பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்டிருந்தது. சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடித்திருக்க கதாநாயகியாக நடிகை துஷாரா விஜயன் நடித்து பிரமாதப் படுத்தியிருப்பார்.

பெரிதாக அங்கீகாரம் கிடைக்கவில்லை

பெரிதாக அங்கீகாரம் கிடைக்கவில்லை

தமிழ் சினிமாவிற்கு புதிய வரவாக வந்துள்ள துஷாரா விஜயன் போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மிக குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக அன்புள்ள கில்லி என்ற படத்தில் நடித்தார். இந்த படம் முழுக்க முழுக்க நாயை பற்றியதாக எடுக்கப்பட்டு இருந்தது ரசிகர் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது ஆனால் இந்த இரண்டு படங்களிலும் துஷாராவுக்கு பெரிதாக அங்கீகாரம் கிடைக்கவில்லை

மாரியம்மாளாக

மாரியம்மாளாக

இந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்திருந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்ததுடன் தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்துள்ளது. சார்பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரை உள்ளிட்ட பல பரம்பரை குத்துச்சண்டை குழுக்களைப் பற்றி உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இதில் மாரியம்மாளாக ஆர்யாவின் மனைவியாக நடித்து பிரமாதப்படுத்தி இருந்தார்.

Recommended Video

Shooting spot ல ரொம்ப கலாய்ப்பாங்க | Actress Dushara Vijayan chat | Filmibeat Tamil
நடு காட்டில் தனிமை வந்ததே

நடு காட்டில் தனிமை வந்ததே

சார்பட்டா பரம்பரையில் துஷாராவின் நடிப்பை பார்த்து வியந்த பா ரஞ்சித் தன்னுடைய அடுத்த படத்திலும் இவரை கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளார். அந்த வகையில் இப்போது காதல் கதை களத்தில் உருவாகி வரும் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களை ரசிக்க வைத்து வரும் துஷாரா இப்பொழுது நடுக்காட்டில் எடுத்த அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதற்கு " நடு காட்டில் தனிமை வந்ததே அழகிய ஆசை உணர்வு தந்ததே" என ரொமான்டிக்காக கேப்ஷனும் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X