வந்தது பெண்ணா வானவில்தானா.. சிம்ரனுக்காக பாடல் பாடிய சசிகுமார்.. இப்படியும் நடந்திருக்கா?

சென்னை: சிம்ரன் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர். அவர் பீக்கில் இருந்தபோது நடிக்க வந்த நடிகைகள் அனைவருமே எப்படியாவது சிம்ரன் மாதிரி வளர்ந்துவிட வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார்கள். பப்லியாக இருந்தால்தான் தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகைகளை கொண்டாடுவார்கள் என்ற டெம்ப்ளேட்டை அடித்து நொறுக்கியவர் சிம்ரன். கடைசியாக அந்தகன் படத்தில் நடித்த அவர் இப்போது சசிகுமாருடன் டூரிஸ்ட் ஃபேமிலி என்கிற படத்தில் நடித்திருக்கிறார். படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது.

தமிழ் சினிமாவை ஒருகாலத்தில் கலக்கிய சிம்ரன் தெரெ மெரே சாப்னே என்ற ஹிந்தி படத்தில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். அவருக்கு மிகச்சிறந்த பெயரை அந்தப் படம் பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து தமிழில் விஐபி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற மின்னல் ஒரு கோடி பாடலில் சிம்ரனின் நடனத்தையும், அழகையும் பார்த்து ரசிகர்கள் சொக்கிப்போயினர். தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ்மோர் படத்தில் நடித்தார். தமிழில் அவர் நடித்த முதல் இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல வெளிச்சத்தை கொடுத்தது.

ரூல் செய்த சிம்ரன்: இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு நேருக்கு நேர்,பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி என வரிசையாக தமிழ் படங்களில் கமிட்டானார். அவர் கமிட்டான படங்கள் அனைத்துமே ஒன்று மெகா ஹிட் இல்லை சூப்பர் டூப்பர் ஹிட் லிஸ்ட்டில் இணைந்தன. இதனால் ஒரு நாயகியின் சகாப்தம் தமிழ் சினிமாவில் எழுத ஆரம்பிக்கப்பட்டது.

Sasikumar Talks about Sasikumar at Recent Interview

சிறந்த நடிகை: சிம்ரனை பொறுத்தவரை அவரது பலமே அவரது அழகும், திறமையும். அவரிடம் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டரில் பின்னி பெடல் எடுப்பவர். ஒருபக்கம் வாலியில் கிளாமர் ரோலும் செய்தார், மறுபக்கம் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் கண் தெரியாத ருக்குவாக ரசிகர்களை கண் கலங்கவும் செய்தார். அதனாலேயே அவரது கொடி தமிழ் சினிமாவில் உச்சம் பறந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் அப்படி ஒரு ஹீரோயின் கிடைப்பது அபூர்வம் என்றே கோலிவுட் கருதியது. அவர் தனது பால்ய கால நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு சினிமாவிலிருந்து விலகிய அவர் சில வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக அந்தகன் படத்தில் நடித்தார்.

சசிகுமாருக்கு ஜோடி: தற்போது அவர் சசிகுமாருக்கு ஜோடியாக டூரிஸ்ட் ஃபேமிலி என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது. அதேசமயம் அண்மையில் வெளியான அந்தப் படத்தின் டீசர் பட்டையை கிளப்பியது. அதனைப் பார்த்த ரசிகர்கள் சசிகுமாரும், சிம்ரனும் அருமையாக நடித்திருக்கிறார்கள். ஈழ தமிழை சசி சரியாக பேசியிருக்கிறார். படம் முழுக்க காமெடி சரவெடிதான் இருக்கும் என்பது டீசரை பார்க்கையில் உறுதியாகிறது என்று கூறினார்கள்.

சசிகுமார் பேட்டி: இந்நிலையில் சசிகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிம்ரன் குறித்து பேசியிருக்கிறார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "சிம்ரன் நடித்திருந்த கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை ராமேஸ்வரத்தில் எங்கே எடுத்திருந்தார்களோ அந்த இடத்துக்கு பக்கத்தில் நானும் சிம்ரனும் நடந்து வருவது மாதிரி இந்தப் படத்தில் எடுத்தார்கள். அது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. நான் நடித்த சுப்ரமணியபுரம் தொடங்கி அயோத்திவரை எல்லா படங்களையும் பார்த்திருக்கிறார். அவர் இந்தப் படத்தின் செட்டுக்கு வரும்போது வந்தது பெண்ணா வானவில்தானா என்று எல்லோரும் கோரஸாக பாடுவோம். அவர் வெட்கத்தில் சிரிப்பார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X