இதுக்கு பேருதான் சின்சியாரிட்டி... பப்ளிக் டாய்லெட்டில் வைத்து காஸ்ட்யூம் மாற்றிய பிரபல நடிகை!

நடிகை சிருஷ்டி டாங்கே சத்ரு படத்தின் பாடல் காட்சி ஒன்றிற்காக பொதுக் கழிப்பறையில் உடை மாற்றியதாக அப்படத்தின் இயக்குனர் நவீன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Director Naveen Nanjudan: பப்ளிக் டாய்லெட்டில் காஸ்ட்யூம் மாற்றி ஒத்துழைத்த நடிகை

சென்னை: சத்ரு படத்தின் பாடல் காட்சி ஒன்றிற்காக பொதுக் கழிப்பறையில் உடை மாற்றியதாக நடிகை சிருஷ்டி டாங்கேயை பாராட்டியுள்ளார் அப்பட இயக்குநர் நவீன் நஞ்சுண்டன்.

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் 'சத்ரு'.இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடித்துள்ளார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.

பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார்.

போலீசாக கதிர்:

போலீசாக கதிர்:

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய இயக்குநர், "இந்த படத்தில் கதிர் போலீசாக நடித்திருக்கிறார். ஆனால் இது போலீஸ் கதை கிடையாது. சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் நிறைந்த ஒரு பரபரப்பான சம்பவங்கள் தான் படம்.

விறுவிறுப்பான திரைக்கதை:

விறுவிறுப்பான திரைக்கதை:

தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டுவரும் முகமே தெரியாத ஐந்து குற்றவாளிகளை, 24 மணி நேரத்தில் கதிர் எப்படித் தேடிப் பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை. படம் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை விறுவிறுப்பாகச் செல்லும்.

சிருஷ்டி டாங்கே:

சிருஷ்டி டாங்கே:

இப்படத்திற்கு நாயகி சிருஷ்டி டாங்கே கொடுத்த ஒத்துழைப்பு மறக்கமுடியாதது. லைவ் லொகேஷன்களுக்காக நடிகர், நடிகைகளை அவ்வளவு டார்ச்சர் பண்ணியிருக்கோம். ஆனால் அவர்கள் முகம் சுளிக்காமல் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

பப்ளிக் டாய்லெட்:

பப்ளிக் டாய்லெட்:

ஒரு பாடல் காட்சிக்காக நாயகி 20 காஸ்ட்யூம் மாத்தவேண்டியிருந்தது. கேரவன் கொடுத்தாலே நடிகைகள் ஒரு நாளைக்கு 10 காஸ்ட்யூம் மாத்துவதே சிரமம். ஆனால், சிருஷ்டி டாங்கே பாண்டிச்சேரி கடற்கரையில் இருந்த பப்ளிக் டாய்லெட்டுக்குள் போய்கூட காஸ்ட்யூம் மாற்றி, நடித்தார். அந்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது" என சிருஷ்டி டாங்கேயைப் பாராட்டி பேசினார் நவீன் நஞ்சுண்டன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X