ரசிகர்களைத் திருப்திப்படுத்துவது சவாலானது-நித்யா மேனன்

By Sudha

Nithya Menon
மலையாளத்திலிருந்து இன்னொரு ஹீரோயின் கோலிவுட்டுக்கு வந்துள்ளார். பெயர் நித்யா மேனன், அறிமுகமாகும் படம் 180.

சத்யம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்180. சித்தார்த் நாயகனாக நடித்துள்ளார். நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ளார்.

மலையாளத்தில் நிறையப் படங்களை முடித்துள்ள நித்யா, கன்னடம், தெலுங்கிலும் நடித்துள்ளார். இப்போது கடைசியாக கோலிவுட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார்.

தனது அனுபவம் குறித்து அவர்கூறுகையில், தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் சினிமாவில் நடிப்பது என்பது பெருமைக்குரிய ஒன்று, சவுகரியமானது.

இப்படத்தில் நான் போட்டோ ஜர்னலிஸ்ட்டாக நடித்துள்ளேன். உண்மையில் நான் போட்டோ ஜர்னலிஸ்ட் மாணவி. எனவே இந்த வேடத்தில் நடிப்பதில் எனக்குச் சிரமம் ஏற்படவில்லை.

இப்படம் ஒருகாதல் கதை. இப்படத்தின் கதையைக் கேட்டதுமே பிடித்து விட்டது. அழகாக செய்துள்ளேன் என்று நினைக்கிறேன்.

தமிழ் ரசிகர்களுக்கு நான் புதுசு. தமிழ் ரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டியது சவாலான காரியம். இருந்தாலும் தமிழ் ரசிகர்களின் விருப்ப நாயகியாக நான் மாறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் நித்யா மேனன்.

மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து விட்ட நித்யாவுக்கு தமிழ்தான் பிடித்திருக்கிறதாம். ஏன் என்று கேட்டால், தமிழ் சினிமாதான் எனக்குப் பொருத்தமானதாகும். நல்ல படங்கள் இங்கு எடுக்கப்படுகின்றன. மேலும் எனக்கு ஏற்றமாதிரியான ரோல்களும் இங்குதான் கிடைக்கும்.

நல்ல கதையுடன், கமர்ஷியல் வெற்றிக்குத் தேவையானதையும் கொடுப்பது தமிழ் சினிமா மட்டுமே. கஜினி இதற்கு நல்ல உதாரணம் என்றார் நித்யா.

கோலிவுட்டில் வலுவாக காலூண்ட திட்டமிட்டு விட்டார் நித்யா என்பது அவரது பேச்சிலிருந்தே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X