நடிகை சாவித்திரி கதை கேட்டு அழுத திரிஷா
மறைந்த பழைய நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை கேட்டு திரிஷா கண்கலங்கினார்.
பாலகிருஷ்ணாவுடன் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்க திரிஷா வந்து இருந்தார்.
சில காட்சிகளில் நடித்த அவர், ஓய்வு எடுப்பதற்காக சிறிது நேரம் ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார். அப்போது, தெலுங்கு பட உலகை சேர்ந்த மூத்த நடிகர் ஒருவர் சாவித்திரியின் வாழ்க்கை கதையைப் பற்றி பேச துவங்கினார்.

சாவித்திரியின் கதை
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து லட்சம், லட்சமாக சம்பாதித்த சாவித்திரி சொத்துக்களை வாங்கி குவித்தார். ஆனால், கடைசியில் சாவித்திரிக்கு எதுவும் நிலைக்கவில்லை.

மதுப்பழக்கம்
மதுப்பழக்கத்துக்கு அடிமையானதால் எல்லாம் போய்விட்டது. பட வாய்ப்புகளை இழந்தார். சம்பாதித்த சொத்துக்களை இழந்தார். நோய்வாய் பட்டார்.

கோமா நிலையில்
பல மாதங்கள் கோமா நிலையிலேயே படுக்கையில் இருந்து உயிரை விட்டார் என்று உருக்கமாக அவரது சாதனையை சொல்லிக் கொண்டிருந்தார்.

கண்ணீர் விட்ட திரிஷா
இதை கேட்டதும் திரிஷாவுக்கு கண்களில் நீர் கசிந்தது. தன்னுடைய கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

துயரம் நிறைந்த கதை
இன்றைய இளம் கதாநாயகிகள் பலருக்கு சாவித்திரி ரோல் மாடலாக இருக்கிறார். அவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகங்களா? என்று சொல்லி திரிஷா வருத்தப்பட்டாராம்.


Click it and Unblock the Notifications











