'வாழ்த்துச் சொல்லுங்க..' தனது குழந்தையின் போட்டோவை முதன்முறையாக வெளியிட்ட பிரபல நடிகை!
மும்பை: பிரபல நடிகை, தனது குழந்தையின் போட்டோவை முதன்முறையாக வெளிப்படுத்தி உள்ளார்.
தமிழில் எஸ்.ஜே.சூர்யா நடித்த நியூட்டனின் மூன்றாம் விதி, திகில் ஆகிய படங்களில் நடித்திருப்பவர், சாயாலி பகத்.
இவர் இந்தியில், இம்ரான் ஹாஸ்மியுடன் த டிரெயின், அஜய்தேவ்கனின் ஹல்லா போல், மதுர் பண்டர்கரின் ஜெயில், கோஸ்ட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

திருமணம்
முன்னாள் மிஸ் இந்தியாவான சாயாலி பகத், ஹரியானாவைச் சேர்ந்த தொழிலதிபர் நவ்நீத் பிரதாப் சிங் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகும் படங்களில் நடித்து வந்தார் சாயாலி. இந்நிலையில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. கடந்த சில வருடங்களாக அவர் படங்களில் நடிக்கவில்லை.

கர்ப்பத்துடன் போட்டோ
இதற்கிடையே, தனது சமூக வலைத்தள பக்கத்தில் இப்போது போட்டோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார் சாயாலி பகத். அதில் அவர் கர்ப்பத்துடன் கணவரோடு நிற்கும் புகைப்படத்தையும் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். கூடவே பெண் குழந்தையின் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். அது அவரது குழந்தை.

ஹலோ சொல்லுங்கள்
அவர் பெண் குழந்தைக்கு அம்மாவாகி இருக்கிறார். இதை இப்போதுதான் முதன்முறையாக தனது நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் தெரியபடுத்தி இருக்கிறார். குழந்தைக்கு இவான்கா என்று பெயரிட்டுள்ளார். 'இவான்கா சிங்குக்கு ஹலோ சொல்லுங்கள்' என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெளிநாட்டு பெயர்
குழந்தை அழகாக இருக்கிறது என்றும் உங்கள் குடும்பத்துக்கு வந்த விலைமதிப்பில்லாத கிஃப்ட் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர். ஒருவர், அம்மாவும் மகளும் அத்தனை அழகு என்று கூறி வாழ்த்தியுள்ளார். இன்னொருவர், ஏன் குழந்தைக்கு இந்த பெயர்? இந்தியர்கள் இந்திய பெயரை வைக்காமல் வெளிநாட்டினர் பெயரை ஏன் வைக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











