»   »  சமந்தா வீட்டில் குடியேறிய தமிழ் ஹீரோக்களின் செல்லாக்குட்டி

சமந்தா வீட்டில் குடியேறிய தமிழ் ஹீரோக்களின் செல்லாக்குட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகை சயீஷா சைகல் சமந்தாவின் வீட்டை விலைக்கு வாங்கிவிட்டாராம்.

பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் பேத்தியான சயீஷா சைகல் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் ஹீரோவாக அறிமுகமான அகில் படம் மூலம் நடிகையானார்.

அதன் பிறகு பாலிவுட் பக்கம் சென்ற சயீஷா ஜெயம் ரவியின் வனமகன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

கோலிவுட்

கோலிவுட்

வனமகன் படத்தில் சயீஷா டான்ஸ் ஆடிய அழகை பார்த்தே பல தமிழ் ஹீரோக்கள் அசந்துவிட்டார்களாம். முதல் படம் ரிலீஸாவதற்கு முன்பே விஷால்-கார்த்தி நடிக்கும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் ஒப்பந்தம் ஆனார் சயீஷா.

ஹீரோக்கள்

ஹீரோக்கள்

வனமகன் படத்தில் சயீஷா போட்ட ஆட்டத்தை பார்த்து அசந்துபோயுள்ள இளம் ஹீரோக்கள் அவரை தங்களுக்கு ஜோடியாக்குமாறு தயாரிப்பாளர்களிடம் கூறி வருகிறார்களாம்.

3 படங்கள்

3 படங்கள்

3 புதிய படங்களில் நடிப்பது குறித்து சயீஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். சயீஷா தனது அம்மாவையே தனக்கு மேனேஜராக்கியுள்ளாராம்.

வீடு

வீடு

தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க வசதியாக ஹைதராபாத்தில் தங்க முடிவு செய்தார் சயீஷா. இதையடுத்து ஹைதராபாத்தில் வீடு தேடிக் கொண்டிருந்தவருக்கு புது வீடு கிடைத்துள்ளது.

சமந்தா

சமந்தா

ஹைதராபாத்தின் முக்கிய பகுதியில் உள்ள வீடு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார் சயீஷா. அது நடிகை சமந்தா வசித்த வீடு என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா டோலிவுட்டில் கொடிகெட்டிப் பறந்தார், அவரை போன்றே சயீஷாவும் வெற்றி பெறுவாரா என்று பார்க்கலாம்.

Samantha goes busy with her marriage shopping-Filmibeat Tamil
English summary
Young actress Sayeesha Saigal has bought Samantha's house in Hyderabad. She wants to concentrate on telugu and tamil films.
Please Wait while comments are loading...