»   »  ரஜினி, தல, தளபதி யாரையும் விட்டுவைக்கல: இந்த நடிகை ரொம்பவே உஷாரு தான்!

ரஜினி, தல, தளபதி யாரையும் விட்டுவைக்கல: இந்த நடிகை ரொம்பவே உஷாரு தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரஜினிகாந்த், அஜீத், விஜய் என்று அனைத்து நடிகர்களையும் பாராட்டியுள்ளார் நடிகை சயீஷா.

ஜெயம் ரவியின் வனமகன் படம் மூலம் கோலிவுட் வந்துள்ளவர் சயீஷா சைகல். வனமகன் படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. இந்நிலையில் சயீஷா ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

அந்த கேள்வி, பதில் விபரம் வருமாறு,

ரஜினி

தலைவர் ரஜினி பற்றி சில வார்த்தைகள் என்று கேட்ட ரசிகருக்கு லெஜண்ட், மரியாதைக்குரியவர் என்று பதில் அளித்துள்ளார் சயீஷா.

அஜீத்

நீங்கள் அஜீத்துடன் நடிக்க விரும்புகிறீர்களா, உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என ஒருவர் கேட்டார். அதற்கு சயீஷாவோ அஜீத் சார் தான் என் ஃபேவரைட் என்றார்.

விஜய்

விஜய்யை பற்றி கேட்ட ரசிகருக்கு சூப்பர்ஸ்டார் மற்றும் கிங் என்று பதில் அளித்துள்ளார் சயீஷா.

சிம்பு

சிம்பு பற்றி சில வார்த்தைகள் என்று ரசிகர் கேட்டதற்கு, சூப்பர்ப்! அருமையான நடிகர் என்று தெரிவித்துள்ளார் சயீஷா.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் மிகவும் திறமையானவர் என்று சயீஷா தெரிவித்துள்ளார்.

சூர்யா

சூர்யா ஒரு ஃபென்டாஸ்டிக் நடிகர் என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் சயீஷா.

English summary
Actress Sayesha Saigal definitely knows how to impress fans. Her recent twitter interaction with fans is the best proof.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil