ஆர்யா புருஷனாக வரும் நேரம்: சயீஷாவுக்கு அடித்த யோகம்
Recommended Video

சென்னை: திருமணம் நிச்சயமாகியுள்ள நிலையில் கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் சயீஷா.
நடிகைகளுக்கு திருமணம் நிச்சயமானால் பட வாய்ப்புகள் குறையும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆர்யாவின் வருங்கால மனைவி சயீஷா விஷயத்தில் அது பொய்யாகியுள்ளது.
சயீஷா கன்னட திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

சயீஷா
கன்னட பவர்ஸ்டார் புனித் ராஜ்குமாரை வைத்து சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கும் யுவரத்னா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சயீஷா. இது தான் சயீஷா நடிக்கும் முதல் கன்னட படம் ஆகும். அவர் நாளையில் இருந்த அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
ட்விட்டர்
புனித் ராஜ்குமார் படத்தில் நடிக்கப் போவது குறித்த தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார் சயீஷா. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மார்ச்
மார்ச் 10ம் தேதி திருமணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சயீஷா புதுப்படத்தின் ஷூட்டிங்கிற்கு செல்கிறார். அப்படி என்றால் சயீஷா திருமணத்திற்கு பிறகும் நடிப்பார் என்று ரசிகர்கள் மகிழ்கிறார்கள்.

ஆர்யா
சூர்யா, ஆர்யா, மோகன்லால் உள்ளிட்டோரை வைத்து கே.வி. ஆனந்த் இயக்கியுள்ள காப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார் சயீஷா. அடுத்ததாக அவர் புனித் ராஜ்குமார் படத்தில் நடிக்கிறார். திருமணம் நிச்சயமானாலும் சயீஷாவின் மார்க்கெட் பாதிக்கப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.


Click it and Unblock the Notifications











